தமிழகத்தில் நாளை மறுநாள் அனைத்து பொறியியல் மற்றும் கலை அறிவியல் கல்லூரிகளுக்கும் விடுமுறை என உயர் கல்வித்துறை செயலாளர் கார்த்திகேயன் அறிவித்துள்ளார். அண்ணா பல்கலைக் கழகம் மற்றும் அதன் கீழ் இயங்கும் பொறியியல் கல்லூரிகளில்,எம்பிஏ,எம்சிஏ உள்ளிட்ட முதுநிலை பொறியியல் படிப்புகளில் சேருவதற்கான டான்செட் தேர்வு நாளை மறுநாள் நடைபெறுவதால் அதில் மாணவர்கள் பங்கேற்க ஏதுவாக அனைத்து கல்லூரிகளுக்கும் விடுமுறை வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே,அண்ணா பல்கலைக்கழகத்தின் https://tancet.annauniv.edu/tancet/index.html என்ற இணையதள பக்கத்தில் டான்செட் 2022 தேர்வுக்கான ஹால் டிக்கெட்டுகளை பதிவிறக்கம் […]
மாட்டிறைச்சி பிரியாணியை இலவசமாக வழங்குவோம் என இஸ்லாமிய அமைப்புகள் அறிவிப்பு. ஆம்பூர் பிரியாணி திருவிழாவில் மாட்டிறைச்சி பிரியாணியை அனுமதிக்காவிட்டால், இலவசமாக வழங்குவோம் என தலித் மற்றும் இஸ்லாமிய கூட்டமைப்புகள் அறிவித்துள்ளது. பிரியாணி திருவிழா நடைபெறும் வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளனர். இதனிடையே, திருப்பூர் மாவட்ட நிர்வாக சார்பில் ஆம்பூரில் நாளை முதல் 15-ஆம் தேதி வரை மூன்று நாட்கள் பிரியாணி திருவிழா நடைபெறுகிறது என்று அம்மாவட்ட ஆட்சியர் ஏற்கனவே அறிவித்திருந்தார். இதற்கான பணிகள் ஆம்பூர் வர்த்தக […]
நேற்று காலை ஆந்திர கடலோரப்பகுதியில் நிலவிய அசானி புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்து மசிலிப்பட்டனம் அருகே கரையைக் கடந்தாலும்,மசிலிப்பட்டணத்திற்கு மேற்கே தாழ்வு மண்டலமாக நிலவி வருகிறது எனவும்,மேலும்,இது காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்து அதே பகுதியில் நீடிக்கும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன்காரணமாக,தமிழகத்தில் வருகின்ற 14 ஆம் தேதி 11 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.அதன்படி,நீலகிரி,கோவை, திருப்பூர்,தேனி,திண்டுக்கல்,சேலம்,ஈரோடு,கரூர்,நாமக்கல்,திருச்சி,பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் நாளை மறுநாள் […]
திமுக தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டுமென என ஜாக்டோ ஜியோ அமைப்பு கோரிக்கை. தமிழகத்தில் தனிநபர் ஒருவருக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தில் ஆண்டுக்கு ரூ.2 லட்சம் செலவாகிறது. புதிய ஓய்வூதியத் திட்டதில் ரூ.50,000 தான் செலவாகிறது. எனவே, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவது சாத்தியமற்றது என கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் தமிழக அரசு தெரிவித்திருந்தது. பழைய ஓய்வூதியத் திட்ட சாத்தியமற்றது என தமிழக அரசு கூறியதற்கு, அரசியல் தலைவர்கள் என பலரும் எதிர்ப்பு தெரிவித்து, […]
ஆதீனத்தின் மனுவை பரிசீலித்து உரிய பாதுகாப்பு வழங்க மாவட்ட நிர்வாகத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு. பட்டணப் பிரவேச நிகழ்ச்சிக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க கோரி அரசிடம் விண்ணப்பிக்கலாம் என்று தருமபுரம் ஆதீனத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆதீனத்தின் மனுவை பரிசீலித்து உரிய பாதுகாப்பு வழங்க மாவட்ட நிர்வாகத்துக்கு நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. தருமபுரம் ஆதீனத்தில் பட்டணப்பிரவேசத்தின் போது சட்டம் – ஒழுங்கு பிரச்சனை ஏற்பட வாய்ப்பு இருப்பதாக ராஜப்பிரகாசம் என்பவர் வழக்கு தொடுத்திருந்தார். இந்த […]
இலங்கை யாழ்ப்பாணம் சிறையில் உள்ள ராமேஸ்வரம் மீனவர்கள் 12 பேரை விடுதலை செய்து கிளிநொச்சி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தனுஷ்கோடி அருகே எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கடந்த மார்ச் 24 ஆம் தேதி இலங்கை கடற்படையால் 12 மீனவர்கள் கைது செய்யப்பட்டனர்.அதன்பின்னர்,ராமேஸ்வரம் மீனவர்கள் 12 பேரையும் மே 12-ஆம் தேதி வரை யாழ்ப்பாணம் சிறையில் அடைக்க கிளிநொச்சி நீதிமன்றம் உத்தரவிட்டது.மேலும் தமிழக மீனவர்கள் பிணையில் செல்ல வேண்டுமென்றால் இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.1 கோடி செலுத்த வேண்டும் […]
தமிழகத்தில் ஆட்டோ மீட்டர் கட்டணத்தை மறுநிர்ணயம் செய்வது தொடர்பாக இன்று பிற்பகல் 3.30 மணிக்கு போக்குவரத்து துறை ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. அதன்படி,சென்னை கே.கே.நகர் வட்டார போக்குவரத்து துறை அலுவலகத்தில் இணை ஆணையர் தலைமையில் நடைபெறும் இன்று கூட்டத்தில் தொழிற்சங்க பிரதிநிதிகளுடனும்,நாளை நுகர்வோர் அமைப்புகளுடனும் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.பயணிகளிடம் அதிக கட்டணம் வசூலிப்பதாக புகார் எழுந்து வரும் நிலையில் ஆட்டோவில் மீட்டர் பொருத்தி இயக்குவது தொடர்பாகவும்,கட்டணம் குறித்தும் பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது.
ஆசிரியர்கள் – மாணவர்கள் இடையேயான பிரச்சனைக்கு தீர்வாக பள்ளிகளில் காலை நிகழ்ச்சிகள் நடத்தலாம் என அமைச்சர் அறிவிப்பு. தமிழகத்தில் உள்ள அங்கன்வாடிகளில் LKG, UKG வகுப்புகள் தொடர்ந்து செயல்படும் என செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் திட்டவட்டமாக தெரிவித்தார். இதன்பின் பேசிய அவர், ஆசிரியர்களிடம் ஒழுங்கீனமாக நடக்கும் மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். மாணவர்கள் ஆசிரியர்களிடத்தில் தவறாக நடந்து கொண்டதால் மன்னித்து அவர்களுக்கு உரிய அறிவுரைகளை வழங்கப்படுகின்றன. இதுவரை சேட்டைகளில் ஈடுபட்ட மாணவர்களுக்கு TC […]
நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் திட்ட பணிகள் தொடக்கம். தமிழகத்தில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் ரூ.518.17 கோடி மதிப்பீட்டில் 21 முடிவுற்ற திட்டப் பணிகளை சென்னை, தலைமைச் செயலகத்தில் இருந்தபடி காணொளி வாயிலாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடக்கி வைத்தார். இதன்பின்னரே கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகள் மற்றும் கொரோனா தடுப்பு பணியில் இறந்த பணியாளர்களின் குடும்பத்தினருக்கு உதவித்தொகையும் முதலமைச்சர் வழங்கினார். அதுமில்லாமல் புதிய சில திட்டங்களும் தொடங்கப்பட்டுள்ளது. குடிநீர் […]
பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை. தமிழ்நாடு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல அதிகார அமைப்பின் முதல் கூட்டம் முதலமைச்சர் தலைமையில் இன்று நடைபெறுகிறது. இந்த முதல் ஆலோனை கூட்டத்தில் முக்கிய அமைச்சர்கள், தலைமை செயலாளர், துறை செயலாளர்கள் மற்றும் தமிழ்நாடு அரசின் முக்கிய அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர். இதில் வேளாண் பாதுகாப்பிற்கான கொள்கைகள், பாசனம் மற்றும் வெள்ள நீர் மேலாண்மை திட்டங்கள், வேளாண்மை மற்றும் அதை சார்ந்த தொழிலகங்கள் மேம்பாடு ஆகியவை குறித்து […]
முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மேலும் ஒரு மோசடி புகார். அரசு வேலை வாங்கித் தருவதாக பல பேரிடம் ரூ.2 கோடி வரை பெற்று மோசடி செய்துவிட்டதாக, முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது சிவகங்கையை சேர்ந்த சண்முகநாதன் என்பவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜியின் உதவியாளர் எனக்கு நல்ல நண்பர். அரசு வேலை வாங்கி தருவதாக அவர் சொன்னதன் […]
பொதுவாக பெண்கள் மிகவும் விரும்பி அணியும் பொருட்களில் தங்க நகைகள்தான் முதலிடம் வகிக்கும்.மேலும்,ஏதாவது முதலீடாக இருந்தாலும் தங்கத்தில்தான் பெரும்பாலான பெண்கள் முதலீடு செய்வார்கள்.இதனால்,தங்கத்தின் விலையை பெண்கள் எப்போதும் உற்று நோக்குவதுண்டு. இந்த வேளையில்,அட்சய திரிதியை தினத்தை முன்னிட்டு குறைந்து வந்த தங்கம் விலை சற்று உயர்ந்து விற்பனை செய்யப்பட்ட நிலையில், சென்னையில் நேற்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.472 -க்கு குறைந்து விற்பனை ஆனது. இந்நிலையில்,சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் […]
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையை அடிப்படையாக கொண்டு பெட்ரோல்,டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வரும் நிலையில்,சென்னையில் இன்று 36-வது நாளாக மாற்றமின்றி பெட்ரோல்,டீசல் விலையில் எந்த மாற்றமுமில்லை. இதனால்,பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.110.85-க்கும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.100.94-க்கும் தொடர்ந்து அதே விலையிலேயே விற்பனை செய்யப்படுகிறது. இதனிடையே,தற்போது உலக சந்தையில் பிரென்ட் கச்சா எண்ணெய் விலை 112 டாலராக இருப்பதால்,பெட்ரோல், டீசல் விலை மேலும் உயரும் வாய்ப்பு அதிகரித்து வருகிறது என்று கூறப்படுகிறது.இது […]
தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடந்த 8 ஆம் தேதி அசானி புயலாக வலுப்பெற்றது.அதன்பின்னர் வடமேற்கு வங்கக்கடல் பகுதியை நோக்கி நகர்ந்து வந்து ஆந்திராவின் மசிலிப்பட்டணத்திற்கு அருகே நிலை கொண்டிருந்தது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்து. அதன்பின்னர்,அசானி புயலானது திசை மாறி ஒடிசா கடலோரத்தை நோக்கி நகர்ந்து இன்று காலைக்குள் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மேலும் வலுவிழக்கும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.இதனால்,வடக்கு ஆந்திரா மாவட்டங்களில் கனமழை […]
கடலூரில் கணவர் வீட்டில் கழிவறை இல்லாததால் தற்கொலை செய்து கொண்ட புதுமணப்பெண். கடலூரை சேர்ந்த கார்த்திகேயன் என்பவரும், அரிசி பெரியாங்குப்பத்தை சேர்ந்த ரம்யா என்பவரும் இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில், இரு வீட்டார் ஒப்புதலுடன் கடந்த மாதம் ஆறாம் தேதி திருமணம் செய்து கொண்டனர். இந்த நிலையில் திருமணத்திற்கு பின் கணவர் வீட்டிற்கு சென்ற ரம்யாவுக்கு அங்கு கழிவறை இல்லாதது குறையாக இருந்த நிலையில், கழிவறை இருக்கும் வீட்டை ரம்யா தனது கணவரிடம் அறிவுறுத்தி பார்க்குமாறு […]
பள்ளி, கல்லூரி நேரங்களில் கூடுதல் பேருந்து இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்துத்துறை அமைச்சர் அறிவிப்பு. அனைத்து அரசு போக்குவரத்துக் கழகங்களின் செயல்பாடுகள் குறித்த ஆய்வு கூட்டம், போக்குவரத்து துறை அமைச்சர் எஸ் எஸ் சிவசங்கர் தலைமையில் இன்று நடைபெற்றது. இதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், பள்ளி, கல்லூரி வாகனத்தில் கேமரா கட்டாயம் பொருத்தப்படும் என்றும் பள்ளி, கல்லூரி வாகனத்தில் கேமரா பொருத்துவதற்கான ஆய்வும் கூடிய விரைவில் செய்யப்படும் எனவும் தெரிவித்தார். இதனைத்தொடர்ந்து பேசிய அவர், பள்ளி, […]
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 2, 2ஏ தேர்வு எழுதுவோர் முகக்கவசம் அணிவது கட்டாயம் என அறிவிப்பு. தமிழ்நாட்டில் மே 21ம் தேதி நடைபெற உள்ள ஒருங்கிணைந்த குடிமை பணி தேர்வுகள் தொகுதி இரண்டு Group 2 / 2A தேர்வுக்கான தேர்வு நுழைவுச்சீட்டு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் இன்று வெளியிட்டிருந்தது. குரூப் 2, 2ஏ தேர்வுகளுக்கான ஹால் டிக்கெட்டை http://tnpsc.gov.in என்ற அதிகாரபூர்வ இணையதளத்தில் தேர்வர்கள் தங்கள் OTR கணக்கு வாயிலாக […]
ஆட்டோ மீட்டர் கட்டணத்தை மறுநிர்ணயம் செய்வது குறித்து வரும் 13ம் தேதி போக்குவரத்துறை ஆலோசனை. தமிழகத்தில் ஆட்டோ மீட்டர் கட்டணம் மறுநிர்ணயம் செய்வது தொடர்பான ஆலோசனை கூட்டம் வரும் வெள்ளிக்கிழமை (மே 13ம் தேதி) நடைபெறும் என்று போக்குவரத்துறை தெரிவித்துள்ளது. ஆட்டோ கட்டணம் மறு நிர்ணயம் தொடர்பாக போக்குவரத்து ஆணையர் தலைமையில், ஆலோசனை நடைபெறும் என போக்குவரத்துறை இணை ஆணையர் அறிவித்துள்ளார். தொழிற்சங்கம், அரசு அதிகாரிகள் கொண்ட குழுவுடன் ஆலோசனை நடத்தவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கடந்த 2013-ஆம் […]
அரசு ஊழியர்களுக்கு மறு உத்தரவு வரும் வரை ஈட்டிய விடுப்புக்கு பணம் பெறும் நடைமுறை நிறுத்தி வைப்பு என அறிவிப்பு. ஆசிரியர்கள், பணியாளர்களுக்கும் மறு உத்தரவு வரும் வரை ஈட்டிய விடுப்புக்கு பணம் பெறும் நடைமுறை நிறுத்தி வைக்கப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. தமிழ்நாடு அரசின் உத்தரவை சுட்டிக்காட்டி, பள்ளிக்கல்வித்துறை தனி உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனிடையே, தமிழ்நாட்டில் அரசு ஊழியா்கள், ஆசிரியா்கள் ஆண்டுதோறும் 15 நாட்கள் அல்லது 2 ஆண்டுகளில் 30 நாட்களுக்கு உரிய ஈட்டிய விடுப்பினை சரண் […]
வரும் 21-ம் தேதி நடைபெறும் குரூப் 2, 2ஏ தேர்வுகளுக்கான ஹால் டிக்கெட் TNPSC இணையதளத்தில் வெளியீடு. தமிழ்நாட்டில் மே 21ம் தேதி நடைபெற உள்ள ஒருங்கிணைந்த குடிமை பணி தேர்வுகள் தொகுதி இரண்டு Group 2 / 2A தேர்வுக்கான தேர்வு நுழைவுச்சீட்டு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, குரூப் 2, 2ஏ தேர்வுகளுக்கான ஹால் டிக்கெட் http://tnpsc.gov.in இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வர்கள் தங்கள் OTR கணக்கு வாயிலாக ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் […]