தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடந்த 8 ஆம் தேதி அசானி புயலாக வலுப்பெற்றது.அதன்பின்னர் வடமேற்கு வங்கக்கடல் பகுதியை நோக்கி நகர்ந்து வந்து ஆந்திராவின் மசிலிப்பட்டணத்திற்கு அருகே நிலை கொண்டிருந்தது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்து. அதன்பின்னர்,அசானி புயலானது திசை மாறி ஒடிசா கடலோரத்தை நோக்கி நகர்ந்து இன்று காலைக்குள் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மேலும் வலுவிழக்கும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.இதனால்,வடக்கு ஆந்திரா மாவட்டங்களில் கனமழை […]
கடலூரில் கணவர் வீட்டில் கழிவறை இல்லாததால் தற்கொலை செய்து கொண்ட புதுமணப்பெண். கடலூரை சேர்ந்த கார்த்திகேயன் என்பவரும், அரிசி பெரியாங்குப்பத்தை சேர்ந்த ரம்யா என்பவரும் இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில், இரு வீட்டார் ஒப்புதலுடன் கடந்த மாதம் ஆறாம் தேதி திருமணம் செய்து கொண்டனர். இந்த நிலையில் திருமணத்திற்கு பின் கணவர் வீட்டிற்கு சென்ற ரம்யாவுக்கு அங்கு கழிவறை இல்லாதது குறையாக இருந்த நிலையில், கழிவறை இருக்கும் வீட்டை ரம்யா தனது கணவரிடம் அறிவுறுத்தி பார்க்குமாறு […]
பள்ளி, கல்லூரி நேரங்களில் கூடுதல் பேருந்து இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்துத்துறை அமைச்சர் அறிவிப்பு. அனைத்து அரசு போக்குவரத்துக் கழகங்களின் செயல்பாடுகள் குறித்த ஆய்வு கூட்டம், போக்குவரத்து துறை அமைச்சர் எஸ் எஸ் சிவசங்கர் தலைமையில் இன்று நடைபெற்றது. இதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், பள்ளி, கல்லூரி வாகனத்தில் கேமரா கட்டாயம் பொருத்தப்படும் என்றும் பள்ளி, கல்லூரி வாகனத்தில் கேமரா பொருத்துவதற்கான ஆய்வும் கூடிய விரைவில் செய்யப்படும் எனவும் தெரிவித்தார். இதனைத்தொடர்ந்து பேசிய அவர், பள்ளி, […]
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 2, 2ஏ தேர்வு எழுதுவோர் முகக்கவசம் அணிவது கட்டாயம் என அறிவிப்பு. தமிழ்நாட்டில் மே 21ம் தேதி நடைபெற உள்ள ஒருங்கிணைந்த குடிமை பணி தேர்வுகள் தொகுதி இரண்டு Group 2 / 2A தேர்வுக்கான தேர்வு நுழைவுச்சீட்டு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் இன்று வெளியிட்டிருந்தது. குரூப் 2, 2ஏ தேர்வுகளுக்கான ஹால் டிக்கெட்டை http://tnpsc.gov.in என்ற அதிகாரபூர்வ இணையதளத்தில் தேர்வர்கள் தங்கள் OTR கணக்கு வாயிலாக […]
ஆட்டோ மீட்டர் கட்டணத்தை மறுநிர்ணயம் செய்வது குறித்து வரும் 13ம் தேதி போக்குவரத்துறை ஆலோசனை. தமிழகத்தில் ஆட்டோ மீட்டர் கட்டணம் மறுநிர்ணயம் செய்வது தொடர்பான ஆலோசனை கூட்டம் வரும் வெள்ளிக்கிழமை (மே 13ம் தேதி) நடைபெறும் என்று போக்குவரத்துறை தெரிவித்துள்ளது. ஆட்டோ கட்டணம் மறு நிர்ணயம் தொடர்பாக போக்குவரத்து ஆணையர் தலைமையில், ஆலோசனை நடைபெறும் என போக்குவரத்துறை இணை ஆணையர் அறிவித்துள்ளார். தொழிற்சங்கம், அரசு அதிகாரிகள் கொண்ட குழுவுடன் ஆலோசனை நடத்தவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கடந்த 2013-ஆம் […]
அரசு ஊழியர்களுக்கு மறு உத்தரவு வரும் வரை ஈட்டிய விடுப்புக்கு பணம் பெறும் நடைமுறை நிறுத்தி வைப்பு என அறிவிப்பு. ஆசிரியர்கள், பணியாளர்களுக்கும் மறு உத்தரவு வரும் வரை ஈட்டிய விடுப்புக்கு பணம் பெறும் நடைமுறை நிறுத்தி வைக்கப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. தமிழ்நாடு அரசின் உத்தரவை சுட்டிக்காட்டி, பள்ளிக்கல்வித்துறை தனி உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனிடையே, தமிழ்நாட்டில் அரசு ஊழியா்கள், ஆசிரியா்கள் ஆண்டுதோறும் 15 நாட்கள் அல்லது 2 ஆண்டுகளில் 30 நாட்களுக்கு உரிய ஈட்டிய விடுப்பினை சரண் […]
வரும் 21-ம் தேதி நடைபெறும் குரூப் 2, 2ஏ தேர்வுகளுக்கான ஹால் டிக்கெட் TNPSC இணையதளத்தில் வெளியீடு. தமிழ்நாட்டில் மே 21ம் தேதி நடைபெற உள்ள ஒருங்கிணைந்த குடிமை பணி தேர்வுகள் தொகுதி இரண்டு Group 2 / 2A தேர்வுக்கான தேர்வு நுழைவுச்சீட்டு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, குரூப் 2, 2ஏ தேர்வுகளுக்கான ஹால் டிக்கெட் http://tnpsc.gov.in இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வர்கள் தங்கள் OTR கணக்கு வாயிலாக ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் […]
தஞ்சை பல்கலைக்கழகத்தில் போலி சான்றிதழ் அளித்த 7 பணியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் பரிந்துரை. தஞ்சை பல்கலைக்கழகத்தில் பதவி உயர்வுக்காக 7 ஊழியர்கள் போலி சான்றிதழ் தந்தது கண்டுபிக்கப்பட்டுள்ளது. தட்டச்சு தேர்வு எழுதி தேர்வானதாக போலிச்சான்று தந்து பதவி உயர்வு பெற்ற தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக ஊழியர்கள் 7 பேர் மீதும் துறை ரீதியான நடவடிக்கை எடுக்க தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் ( DoTE ) பரிந்துரை செய்துள்ளது. பதவி உயர்வு பெற […]
பப்ஜி மதனின் யூ-டியூப் சேனல்களில் பெண்கள் குறித்த ஆபாசமாக பேசும் ஆடியோக்கள் தொடர்ந்து வெளியானதையடுத்து,சென்னை சைபா் குற்றப்பிரிவில் அளிக்கப்பட்ட புகார்களின் அடிப்படையில் மதன் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. கைதான மதன்: இதனையடுத்து,பப்ஜி மதன் தலைமறைவான நிலையில்,அவரை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.பின்னர்,போலீசார் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 18-ஆம் தேதி தருமபுரி அருகே பப்ஜி மதன் மற்றும் அவரது மனைவி கிருத்திகாவை கைது செய்தனர். குண்டர் சட்டம் – சிறையில் அடைப்பு: […]
அசானி புயல் 24 மணிநேரத்தில் தாழ்வுமண்டலமாக வலுவிழக்கும் என்று சென்னை வானிலை மையம் தகவல். தமிழகத்தில் வரும் 15-ஆம் தேதி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சென்னையில் மழை தொடரும் என்றும் ஆந்திரா அருகே வங்கக்கடலில் நிலவும் அசானி புயல் 24 மணிநேரத்தில் தாழ்வுமண்டலமாக வலுவிழக்கும் என்றும் கூறியுள்ளது. தற்போது ஆந்திராவுக்கு அருகே மத்திய மேற்கு வங்கக்கடலில் அசானி புயல் நிலவி வருகிறது. இந்த புயல் வலுவிழந்து […]
மாணவர்களின் கிரேடு,மதிப்பெண் சான்றிதழ் தொலைந்து போனால்,புதிய சான்று பெறுவதற்கான கட்டணத்தை 10 மடங்கு உயர்த்தி அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு விடுத்திருந்தது. அதன்படி,தொலைந்துபோன கிரேட் Grade / Mark Sheet-ஐ மீண்டும் பெற ரூ.300-ஆக இருந்த கட்டணம் ரூ.3,000-ஆகவும்,டிகிரி சான்றிதழுக்கான (Degree Certificate) கட்டணம் ரூ.3,000-ல் இருந்து ரூ.5,000 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.2-ஆம் முறையாக சான்றிதழ் கோரி விண்ணப்பிப்பதற்கு கட்டணமாக ரூ.10,000 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.ஆனால்,அண்ணா பல்கலைக் கழகம் கட்டணத்தை உயர்த்தியதற்கு மாணவர்கள் உள்ளிட்ட பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில்,தொலைந்து போன சான்றிதழைப் […]
மதுரை மாநகராட்சிக்கான நடப்பு ஆண்டிற்கான பட்ஜெட்டை மேயர் இந்திராணி தாக்கல் இன்னும் சற்று நேரத்தில் செய்ய இருந்த நிலையில்,மதுரையில் உள்ள அனைத்து வார்டுகளை சேர்ந்த கவுன்சிலர்களும் அறிஞர் அண்ணா மாளிகைக்கு வருகை புரிந்துள்ளனர். இந்நிலையில்,திமுக கவுன்சிலர்களுக்கு ஒதுக்கப்பட்ட இருக்கைகளில் அதிமுக கவுன்சிலர்கள் அமர்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.இதனால், திமுக கவுன்சிலர்கள் அதிமுக கவுன்சிலர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டனர்.இதனையடுத்து,உரிய இருக்கைகளில் அமர வேண்டும் என மாமன்ற செயலாளர் ரமேஷ் உத்தரவு பிறப்பித்தார். ஆனால்,அதனை மீறியும் சுமார் 30 நிமிடங்களுக்கும் மேலாக வாக்குவாதம் […]
வரும் கல்வியாண்டு ( 2022-2023 ) முதல் அரசுப்பள்ளி மாணவியருக்கு ரூ.1,000 வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவிப்பு. தமிழகத்தில் இதுவரை செயல்படுத்தப்பட்டு வந்த ‘மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவித் திட்டம்’, ‘மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித் திட்டம்’ என்று பெயர் மாற்றம் செய்து தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. 12ஆம் வகுப்பினை முடித்தப்பின்னர் உயர்கல்வியில் சேரும் அரசுப் பள்ளி மாணவர்களின் எண்ணிக்கையை உயர்த்தும் வகையில் இந்த திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்பட்டது. இந்த உயர்கல்வி […]
பொதுவாக பெண்கள் மிகவும் விரும்பி அணியும் பொருட்களில் தங்க நகைகள்தான் முதலிடம் வகிக்கும்.மேலும்,ஏதாவது முதலீடாக இருந்தாலும் தங்கத்தில்தான் பெரும்பாலான பெண்கள் முதலீடு செய்வார்கள்.இதனால்,தங்கத்தின் விலையை பெண்கள் எப்போதும் உற்று நோக்குவதுண்டு. இந்த வேளையில்,அட்சய திரிதியை தினத்தை முன்னிட்டு குறைந்து வந்த தங்கம் விலை சற்று உயர்ந்து விற்பனை செய்யப்பட்ட நிலையில், சென்னையில் நேற்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.152-க்கு விற்பனை ஆனது. இந்நிலையில்,சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு […]
திருச்சி சிவாவின் மகன் பாஜகவில் இணைந்தது குறித்து திமுக அமைப்பு செயலாளர் ஆர்எஸ் பாரதி கருத்து. திமுகவில் இருந்து யார் போனாலும் கவலையில்லை என்று அக்கட்சியின் அமைப்பு செயலாளர் ஆர்எஸ் பாரதி தெரிவித்துள்ளார். சென்னை திருநின்றவூரில் நிகழ்ச்சி ஒன்றுக்கு சென்ற அவரிடம், திருச்சி சிவாவின் மகன் சூர்யா சிவா, சமீபத்தில் பாஜகவில் இணைந்தது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்து பேசிய அவர், திமுகவில் இருந்து எம்.ஜி.ஆர் போனபோதே நாங்கள் கவலைப்படவில்லை என்றும் வைகோவையே தூக்கி […]
கடலூர் புதுச்சத்திரத்தில் சுமார் 2800 ஏக்கர் பரப்பளவில் தொடங்கப்பட்ட எண்ணெய் ஆலை, பாதியிலேயே மூடப்பட்ட நிலையில்,அங்கு தொடர்ந்து திருட்டு சம்பவங்கள் நடைபெறுவதாக புகார் எழுந்துள்ளது.அதன்பின்னர் காவல்துறையினர் மேற்கொண்ட நடவடிக்கையால் 70 இருசக்கர வாகனங்கள்,7 மினி லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில்,நேற்று இரும்பு தளவாட பொருட்கள் திருடப்படுவதை தடுக்க வந்த காவல்துறையினரை விரட்டுவதற்காக 50 பேர் கொண்ட திருட்டு கும்பல் பெட்ரோல் குண்டு வீசி தப்பியோடியுள்ளனர்.எனினும், காவல்துறையினர் யாருக்கும் எந்த சேதமும் ஆகவில்லை என்று கூறப்படுகிறது.இதனையடுத்து,அந்த கொள்ளை கும்பலை […]
வங்கக்கடலில் தீவிர புயலாக நிலை கொண்டிருந்த அசானி,தற்போது புயலாக வலுவிழந்து,ஆந்திராவின் மசிலிப்பட்டணத்திற்கு தென்கிழக்கே 40 கிமீ தொலைவில் நிலவுகிறது எனவும்,அடுத்த சில மணிநேரத்தில் கிட்டத்தட்ட வடக்கு நோக்கி நகர்ந்து,மேற்கு மத்திய வங்காள விரிகுடாவை ஆந்திர கடற்கரைக்கு அருகில் காலை 11 மணிக்கு அடையும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதன்பின்னர்,அசானி புயலானது திசை மாறி ஒடிசா கடலோரத்தை நோக்கி நகர்ந்து நாளை காலைக்குள் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மேலும் வலுவிழக்கும் எனவும் இந்திய வானிலை […]
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையை அடிப்படையாக கொண்டு பெட்ரோல்,டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வரும் நிலையில்,சென்னையில் இன்று 35-வது நாளாக மாற்றமின்றி பெட்ரோல்,டீசல் விலையில் எந்த மாற்றமுமில்லை. இதனால்,பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.110.85-க்கும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.100.94-க்கும் தொடர்ந்து அதே விலையிலேயே விற்பனை செய்யப்படுகிறது. இதனிடையே,தற்போது உலக சந்தையில் பிரென்ட் கச்சா எண்ணெய் விலை 112 டாலராக இருப்பதால்,பெட்ரோல், டீசல் விலை மேலும் உயரும் வாய்ப்பு அதிகரித்து வருகிறது என்று கூறப்படுகிறது.இது […]
வங்கக்கடலில் தீவிர புயலாக நிலை கொண்டிருந்த அசானி,தற்போது புயலாக வலுவிழந்துள்ளது என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.மேலும்,ஆந்திராவின் மசிலிப்பட்டணத்திற்கு தென்கிழக்கே 90 கிமீ தொலைவில் அசானி புயல் நிலவுகிறது எனவும்,இது வடமேற்கு திசையில் நகர்ந்து மேற்கு மத்திய வங்காள விரிகுடாவை ஆந்திர கடற்கரைக்கு அருகில் காலை 11 மணிக்கு அடைந்து,பின்னர் திசை மாறி ஒடிசா கடலோரத்தை நோக்கி நகர்ந்து நாளை காலைக்குள் அசானி புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மேலும் வலுவிழக்கும் எனவும் வானிலை ஆய்வு […]
கி.வீரமணி, ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மீது வழக்குப்பதிவு செய்ய தேசிய எஸ்சி, எஸ்டி ஆணையம் உத்தரவு. இளையராஜா விவகாரத்தில் கி.வீரமணி, ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மீது வழக்குப்பதிவு செய்ய சென்னை காவல்துறைக்கு தேசிய எஸ்சி, எஸ்டி ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுதொடர்பாக உத்தரவு கடிதம் கிடைக்கப்பட்ட 15 நாட்களுக்குள் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து சென்னை காவல் ஆணையர், மாவட்ட ஆட்சியர் அறிக்கை தர உத்தரவிட்டது. இந்த நிலையில் கி.வீரமணி, ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பட்டியலின சமூகம் குறித்து இழிவாக பேசியதாக வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு […]