#BREAKING: கி.வீரமணி, ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மீது வழக்கு – தேசிய எஸ்சி, எஸ்டி ஆணையம் உத்தரவு!

கி.வீரமணி, ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மீது வழக்குப்பதிவு செய்ய தேசிய எஸ்சி, எஸ்டி ஆணையம் உத்தரவு.

கி.வீரமணி, ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மீது வழக்குப்பதிவு செய்ய தேசிய எஸ்சி, எஸ்டி ஆணையம் உத்தரவு.

இளையராஜா விவகாரத்தில் கி.வீரமணி, ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மீது வழக்குப்பதிவு செய்ய சென்னை காவல்துறைக்கு தேசிய எஸ்சி, எஸ்டி ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுதொடர்பாக உத்தரவு கடிதம் கிடைக்கப்பட்ட 15 நாட்களுக்குள்  எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து சென்னை காவல் ஆணையர், மாவட்ட ஆட்சியர் அறிக்கை தர உத்தரவிட்டது. இந்த நிலையில் கி.வீரமணி, ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பட்டியலின சமூகம் குறித்து இழிவாக பேசியதாக வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்ய தேசிய எஸ்சி, எஸ்டி ஆணையம் சென்னை காவல்துறைக்கு ஆணையிட்டுள்ளது.

சமீபத்தில் இசையமைப்பாளர் இளையராஜா பிரதமர் மோடியை, அம்பேத்கருடன் ஒப்பிட்டு கருத்து ஒன்றை தெரிவித்திருந்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. சில நாட்களாகவே இளையராஜா வெளியிட்ட கருத்திற்கு, அரசியல் கட்சி தலைவர்கள் உள்ளிட்ட பலரும் எதிர் கருத்து தெரிவித்து கடுமையாக விமர்சித்து வந்தனர். இந்த சமயத்தில் இருட்டி நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தி.க. தலைவர் கி.வீரமணி, ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் உள்பட பலர் அந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர். அப்போது கி.வீரமணி, ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் இளையராஜாவை கடுமையாக விமரித்ததாக கூறப்படுகிறது.