திருச்சி சிவாவின் மகன் பாஜகவில் இணைந்தது குறித்து திமுக அமைப்பு செயலாளர் ஆர்எஸ் பாரதி கருத்து. திமுகவில் இருந்து யார் போனாலும் கவலையில்லை என்று அக்கட்சியின் அமைப்பு செயலாளர் ஆர்எஸ் பாரதி தெரிவித்துள்ளார். சென்னை திருநின்றவூரில் நிகழ்ச்சி ஒன்றுக்கு சென்ற அவரிடம், திருச்சி சிவாவின் மகன் சூர்யா சிவா, சமீபத்தில் பாஜகவில் இணைந்தது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்து பேசிய அவர், திமுகவில் இருந்து எம்.ஜி.ஆர் போனபோதே நாங்கள் கவலைப்படவில்லை என்றும் வைகோவையே தூக்கி […]
கடலூர் புதுச்சத்திரத்தில் சுமார் 2800 ஏக்கர் பரப்பளவில் தொடங்கப்பட்ட எண்ணெய் ஆலை, பாதியிலேயே மூடப்பட்ட நிலையில்,அங்கு தொடர்ந்து திருட்டு சம்பவங்கள் நடைபெறுவதாக புகார் எழுந்துள்ளது.அதன்பின்னர் காவல்துறையினர் மேற்கொண்ட நடவடிக்கையால் 70 இருசக்கர வாகனங்கள்,7 மினி லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில்,நேற்று இரும்பு தளவாட பொருட்கள் திருடப்படுவதை தடுக்க வந்த காவல்துறையினரை விரட்டுவதற்காக 50 பேர் கொண்ட திருட்டு கும்பல் பெட்ரோல் குண்டு வீசி தப்பியோடியுள்ளனர்.எனினும், காவல்துறையினர் யாருக்கும் எந்த சேதமும் ஆகவில்லை என்று கூறப்படுகிறது.இதனையடுத்து,அந்த கொள்ளை கும்பலை […]
வங்கக்கடலில் தீவிர புயலாக நிலை கொண்டிருந்த அசானி,தற்போது புயலாக வலுவிழந்து,ஆந்திராவின் மசிலிப்பட்டணத்திற்கு தென்கிழக்கே 40 கிமீ தொலைவில் நிலவுகிறது எனவும்,அடுத்த சில மணிநேரத்தில் கிட்டத்தட்ட வடக்கு நோக்கி நகர்ந்து,மேற்கு மத்திய வங்காள விரிகுடாவை ஆந்திர கடற்கரைக்கு அருகில் காலை 11 மணிக்கு அடையும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதன்பின்னர்,அசானி புயலானது திசை மாறி ஒடிசா கடலோரத்தை நோக்கி நகர்ந்து நாளை காலைக்குள் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மேலும் வலுவிழக்கும் எனவும் இந்திய வானிலை […]
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையை அடிப்படையாக கொண்டு பெட்ரோல்,டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வரும் நிலையில்,சென்னையில் இன்று 35-வது நாளாக மாற்றமின்றி பெட்ரோல்,டீசல் விலையில் எந்த மாற்றமுமில்லை. இதனால்,பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.110.85-க்கும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.100.94-க்கும் தொடர்ந்து அதே விலையிலேயே விற்பனை செய்யப்படுகிறது. இதனிடையே,தற்போது உலக சந்தையில் பிரென்ட் கச்சா எண்ணெய் விலை 112 டாலராக இருப்பதால்,பெட்ரோல், டீசல் விலை மேலும் உயரும் வாய்ப்பு அதிகரித்து வருகிறது என்று கூறப்படுகிறது.இது […]
வங்கக்கடலில் தீவிர புயலாக நிலை கொண்டிருந்த அசானி,தற்போது புயலாக வலுவிழந்துள்ளது என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.மேலும்,ஆந்திராவின் மசிலிப்பட்டணத்திற்கு தென்கிழக்கே 90 கிமீ தொலைவில் அசானி புயல் நிலவுகிறது எனவும்,இது வடமேற்கு திசையில் நகர்ந்து மேற்கு மத்திய வங்காள விரிகுடாவை ஆந்திர கடற்கரைக்கு அருகில் காலை 11 மணிக்கு அடைந்து,பின்னர் திசை மாறி ஒடிசா கடலோரத்தை நோக்கி நகர்ந்து நாளை காலைக்குள் அசானி புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மேலும் வலுவிழக்கும் எனவும் வானிலை ஆய்வு […]
கி.வீரமணி, ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மீது வழக்குப்பதிவு செய்ய தேசிய எஸ்சி, எஸ்டி ஆணையம் உத்தரவு. இளையராஜா விவகாரத்தில் கி.வீரமணி, ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மீது வழக்குப்பதிவு செய்ய சென்னை காவல்துறைக்கு தேசிய எஸ்சி, எஸ்டி ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுதொடர்பாக உத்தரவு கடிதம் கிடைக்கப்பட்ட 15 நாட்களுக்குள் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து சென்னை காவல் ஆணையர், மாவட்ட ஆட்சியர் அறிக்கை தர உத்தரவிட்டது. இந்த நிலையில் கி.வீரமணி, ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பட்டியலின சமூகம் குறித்து இழிவாக பேசியதாக வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு […]
தென்கிழக்கு வங்கக்கடலில் உருவாகிய ‘அசானி புயல்’ வடமேற்கு திசையில் நகர்ந்து வரும் நிலையில்,இன்று இரவு ஆந்திர கடற்கரைக்கு மிக அருகில் வந்து பின்னர் வடகிழக்கு திசையில் நகர்ந்து செல்லும் எனவும்,இதனால் தமிழகத்தில் 11 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதன்படி,காஞ்சிபுரம்,செங்கல்பட்டு,திருவள்ளூர்,திருவண்ணாமலை,விழுப்புரம்,திருவாரூர்,வேலூர்,ராணிப்பேட்டை,திருப்பத்தூர்,கிருஷ்ணகிரி,தருமபுரி ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. மேலும்,சென்னையைப் பொறுத்தவரை இரண்டு நாட்களுக்கு விட்டுவிட்டு மழை பெய்யும் என்றும் வானிலை […]
தமிழ்நாட்டில் விரைவில் 3,000 காவலர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்று சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு. தமிழக சட்டப்பேரவையில் காவல்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கு, போதைப்பொருட்கள், பாதுகாப்பு உள்ளிட்டவை குறித்து உரையாற்றினார். இதன்பின் காவல்துறையில் 78 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதில், குறிப்பாக காவல்துறையினருக்கு ஆண்டுதோறும் வழங்கப்படும் காப்பீட்டுத்தொகை ரூ.30 லட்சத்தில் இருந்து ரூ.60 லட்சமாக உயர்த்தப்படும் என அறிவித்தார். இரவு பணிக்கு செல்லும் பணியாளர்களை ஊக்குவிக்கும் […]
தமிழக சட்டப்பேரவையில் காவல்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதம் இன்று நடைபெற்று வருகிறது.அதன்படி,சட்டமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்கு சம்மந்தப்பட்ட துறை சார்ந்த அமைச்சர்கள் பதில் அளித்தனர். இதனைத் தொடர்ந்து,காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் முதல்வர் ஸ்டாலின் பதிலுரை ஆற்றி பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்.அந்த வகையில்,திமுக ஆட்சியில் வன்முறைகள் இல்லை எனவும் மத,சாதி கலவரங்கள் இல்லை,துப்பாக்கிச்சூடுகளும் இல்லை எனவும் தெரிவித்த முதல்வர் ஸ்டாலின் அவர்கள்,காவல்துறை என்பது குற்றங்களே நடக்காத சூழலை உருவாக்கும் துறையாக மாற வேண்டும் என்றும் கூறியிருந்தார். […]
குழந்தைகள் மீதான குற்றத்தடுப்புகளை தீவிரப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன என முதலமைச்சர் பேச்சு. தமிழ்நாடு சட்டப்பேரவையில் காவல்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய முதலமைச்சர் முக ஸ்டாலின், கடந்த ஓராண்டு காலத்தில் அனைத்து துறைகளும் எத்தகைய வளர்ச்சி பெற்றுள்ளது என்பதை அறிந்துள்ளீர்கள். தமிழகத்தில் வன்முறைகள் இல்லை, அராஜகங்கள் இல்லை, மத மோதல்கள், சாதி சண்டை, துப்பாக்கிசூடுகள் உள்ளிட்ட எதுவும் இல்லை. இந்தியாவிலேயே அமைதியான, பாதுகாப்பான மாநிலம் தமிழ்நாடு எனும் நற்பெயர் மீண்டும் கிடைத்துள்ளது. குற்றங்களே நடக்காத வகையில் […]
சென்னை ஆர்.ஏ.புரத்தில் பெரும்பாலான ஏழை மற்றும் நடுத்தர மக்கள் வசித்து வரும் நிலையில்,அப்பகுதியில் உள்ள வீடுகள் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளதாக கூறி மாநகராட்சி நிர்வாகத்தில் இடிக்கப்பட்டு வருகின்றன. ஆனால்,இதனை கண்டித்து அப்பகுதி மக்கள் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்த நிலையில்,தன்னுடைய வீடு இடிக்கப்படுவதை கண்டித்து அப்பகுதியில் வசித்து வந்த முதியவர் ஒருவர் நேற்று தீக்குளித்தார்.பின்னர்,உடனடியாக,தீ அணைக்கப்பட்டு முதியவர் மருத்துவமனையில் ஐசியூவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில்,சிகிச்சை பலனின்றி நேற்று காலை உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து,வீடுகளை இடிக்கும் பணிகள் […]
தமிழக சட்டப்பேரவையில் காவல்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதம் இன்று நடைபெற்று வருகிறது.அதன்படி,சட்டமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர். இந்நிலையில்,சென்னையில் ஒவ்வொரு வார்டுக்கும் ஒரு மருத்துவமனை அமைக்கப்படும் என சட்டப்பேரவையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் கூறுகையில்: “நகர்ப்புறங்களில் வாழும் மக்களின் மறுவாழ்வுக்காக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சமீபத்தில் நகர்ப்புற சுகாதார நிலையங்கள் திட்டம் குறித்து அறிவித்ததன்படி, சென்னையில் ஒவ்வொரு வார்டுக்கும் ஒரு மருத்துவமனை […]
கோடநாடு வழக்கு தொடர்பாக இரண்டாவது நாளான இன்றும் சயானிடம் தனிப்படை போலீசார் விசாரணை. திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு கோடநாடு வழக்கு தொடர்பாக கடந்தாண்டு ஜூலை மாதம் முதல் தனிப்படை போலீசார் நடத்தி வரும் மேல் விசாரணை தீவிரமடைந்து வருகிறது. கோடநாடு எஸ்டேட் பங்களாவில் கடந்த 2017-இல் கொலை மற்றும் கொள்ளை சம்பவம் தொடர்பாக, முக்கிய குற்றவாளி கனகராஜ் சாலை விபத்தில் உயிரிழந்த நிலையில், கேரளாவைச் சேர்ந்த சயான், வாளையார் மனோஜ் உள்பட 10 பேரை போலீசார் […]
பொதுவாக பெண்கள் மிகவும் விரும்பி அணியும் பொருட்களில் தங்க நகைகள்தான் முதலிடம் வகிக்கும்.மேலும்,ஏதாவது முதலீடாக இருந்தாலும் தங்கத்தில்தான் பெரும்பாலான பெண்கள் முதலீடு செய்வார்கள்.இதனால்,தங்கத்தின் விலையை பெண்கள் எப்போதும் உற்று நோக்குவதுண்டு. இந்த வேளையில்,அட்சய திரிதியை தினத்தை முன்னிட்டு குறைந்து வந்த தங்கம் விலை நேற்று முன்தினம் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.216 உயர்ந்தும்,நேற்று ரூ.32 குறைந்தும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில்,சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.152 குறைந்து […]
அசானி புயல் எச்சரிக்கை காரணமாக சென்னையில் இருந்து செல்லு 10 விமானங்கள் இன்று ரத்து. வங்கக்கடலில் நிலைக் கொண்டுள்ள அசானி புயல், கரையை கடக்காமல் மீண்டும் கடலை நோக்கி திரும்பும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஆந்திராவின் காக்கிநாடாவிலிருந்து தென்கிழக்கில் 330 கிலோமீட்டர் தொலைவில் மையம் கொண்டிருந்த நிலையில், அசானி புயல் வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை வட ஆந்திரா – ஒடிசா கடற்கரை ஒட்டிய மத்திய மேற்கு மற்றும் வடமேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவக்கூடும் […]
தமிழக சட்டமன்ற நூற்றாண்டு விழா மற்றும் சட்டசபையில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் உருவப்படம் திறப்பு விழா கடந்த ஆண்டு ஆகஸ்ட் 2 ஆம் தேதி நடைபெற்றது.கருணாநிதியின் உருவப்படத்தை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் திறந்து வைத்தார். இந்நிலையில்,மறைந்த தமிழக முன்னாள் முதல்வரும், முன்னாள் திமுக தலைவருமான கருணாநிதி அவர்களின் படத்திறப்பு விழா மற்றும் சட்டமன்ற நூற்றாண்டு விழா சிறப்பு மலரை சட்டமன்றத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் சற்று முன்னர் வெளியிட்டார். இதனை, சபாநாயகர் அப்பாவு பெற்றுக்கொண்டார். இந்த […]
திமுகவின் மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவாவின் மகன் சூர்யா சிவா சில தினங்களுக்கு முன்பு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை முன்னிலையில் அக்கட்சியில் பாஜகவில் இணைந்தார். அண்ணாமலை முன்னிலையில்: கடந்த சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட மனு அளித்தபோதும் திருச்சி சிவாவின் மகன் சூர்யா சிவாவுக்கு திமுக வாய்ப்பு வழங்கவில்லை. இதனால் அதிருப்தி அடைந்த அவர், தனக்கு கட்சி பதவியாவது கொடுக்க வேண்டும் என கோரியதாகவும்,இதனை திமுக தலைமை கண்டு கொள்ளாத நிலையில் பாஜகவுக்கு செல்ல முயற்சி எடுத்துள்ளார். […]
தமிழகத்தில் 1980 ஆம் ஆண்டு முதல் 90 நாட்கள் என இருந்த மகப்பேறு விடுப்பு காலத்தை கடந்த 2011 ஆம் ஆண்டில் 6 மாதங்களாக உயர்த்துவதாக அப்போதைய முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். இதன்பின் 9 மாத காலமாக உயர்த்தப்படும் என்று 2016 ஆம் ஆண்டில் சட்டப்பேரவை விதி 110 கீழ் ஜெயலலிதா அவர்கள் அறிவித்தார். இதனையடுத்து,தேர்தல் அறிக்கையில் கூறியவாறு கடந்த ஆண்டு ஜூலை 1 முதல் மகப்பேறு விடுப்புக்கான கால அளவவானது திமுக ஆட்சிக்கு வந்தவுடன் 1 […]
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையை அடிப்படையாக கொண்டு பெட்ரோல்,டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வரும் நிலையில்,சென்னையில் இன்று 34-வது நாளாக மாற்றமின்றி பெட்ரோல்,டீசல் விலையில் எந்த மாற்றமுமில்லை. இதனால்,பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.110.85-க்கும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.100.94-க்கும் தொடர்ந்து அதே விலையிலேயே விற்பனை செய்யப்படுகிறது. அதைப்போல,டெல்லியில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.105.41 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.96.67 ஆகவும் உள்ளது. தற்போது, மும்பையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.120.51 […]
தமிழக சட்டமன்ற நூற்றாண்டு விழா மற்றும் சட்டசபையில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் உருவப்படம் திறப்பு விழா கடந்த ஆண்டு ஆகஸ்ட் 2 ஆம் தேதி நடைபெற்றது.கருணாநிதியின் உருவப்படத்தை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் திறந்து வைத்தார். இந்நிலையில்,மறைந்த தமிழக முன்னாள் முதல்வரும்,முன்னாள் திமுக தலைவருமான கருணாநிதி அவர்களின் படத்திறப்பு விழா மற்றும் சட்டமன்ற நூற்றாண்டு விழா சிறப்பு மலரை தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் இன்று வெளியிடுகிறார். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் சட்டமன்ற நூற்றாண்டு விழா,கருணாநிதி படத்திறப்பு […]