தமிழக சட்டமன்ற நூற்றாண்டு விழா மற்றும் சட்டசபையில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் உருவப்படம் திறப்பு விழா கடந்த ஆண்டு ஆகஸ்ட் 2 ஆம் தேதி நடைபெற்றது.கருணாநிதியின் உருவப்படத்தை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் திறந்து வைத்தார். இந்நிலையில்,மறைந்த தமிழக முன்னாள் முதல்வரும்,முன்னாள் திமுக தலைவருமான கருணாநிதி அவர்களின் படத்திறப்பு விழா மற்றும் சட்டமன்ற நூற்றாண்டு விழா சிறப்பு மலரை தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் இன்று வெளியிடுகிறார். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் சட்டமன்ற நூற்றாண்டு விழா,கருணாநிதி படத்திறப்பு […]
தமிழகத்தில் கொரோனா சூழல் காரணமாக 2 ஆண்டுகளுக்கு பிறகு தமிழகம் முழுவதும் ,மே 5 ஆம் தேதி 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு தொடங்கியது.ஆனால்,8.22 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதுவார்கள் என அறிவிக்கப்பட்ட நிலையில்,32,674 மாணவர்கள் ஆப்சென்ட் என தேர்வுத்துறை தகவல் தெரிவித்தது. இதனைத் தொடர்ந்து தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மே 6 ஆம் தேதி 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெற்றது 9,55,139 பேர் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை எழுத பதிவு செய்திருந்த நிலையில்,முதல் நாள் […]
பேருந்தில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு பெற்றோர்கள் விருப்பப்பட்டால் கட்டணம் செலுத்தி இருக்கை பெற்றுக்கொள்ளலாம் என போக்குவரத்துத்துறை அறிவிப்பு. தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களில் இயக்கப்படும் அனைத்து வகை பேருந்துகளிலும் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் இனிமேல் டிக்கெட் இல்லாமல் இலவசமாக பயணிக்கலாம் என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் கடந்த சட்டப்பேரவையில் அறிவித்திருந்தார். இந்த நிலையில், பேருந்தில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் பயணிக்கலாம் என அறிவிக்கப்பட்ட நிலையில் பெற்றோர்கள் விருப்பப்பட்டால் கட்டணம் செலுத்தி இருக்கை பெற்றுக்கொள்ளலாம் என போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக […]
12-ம் வகுப்பு ஆங்கில பாட தேர்வில் 3 மாணவர்கள் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளனர் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் தகவல். தமிழகம் முழுவதும் கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு 10, 11, 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு முழுமையான பொதுத்தேர்வு நடைபெற்று வருகிறது. அதன்படி, கடந்த 5ம் தேதி 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், இன்று நடைபெற்ற 12-ம் வகுப்பு ஆங்கில பாட தேர்வில் 3 மாணவர்கள் முறைகேடு ஈடுபட்டதாக பிடிபட்டுள்ளனர் என்று […]
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது குறித்து சட்டப்பேரவையில் முதலமைச்சர் முக ஸ்டாலின் விளக்கம். தமிழக சட்டப்பேரவையில் கேள்வி – பதில் நேரத்தின்போது பேசிய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, கள்ள ஓட்டு போட வந்தவரை பிடித்து கொடுத்தவர் மீது வழக்குப்பதிவு செய்கிறது இந்த அரசு என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது குறித்து கேள்வி எழுப்பினர். அதிமுகவின் போராட்டத்திற்கு அனுமதி வழங்குவதில்லை என்றும் கடந்த ஓராண்டில் சட்ட ஒழுங்கு சீர்கெட்டுவிட்டது எனவும் பல்வேறு குற்றசாட்டிகளை முன்வைத்தார். இதற்கு […]
கோடநாடு வழக்கு தொடர்பாக சயானிடம் இரண்டாவது முறையாக தனிப்படை போலீசார் விசாரணை. கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கு தொடர்பாக குற்றச்சாட்டப்பட்டுள்ள சயானிடம் தனிப்படை போலீசார் மீண்டும் விசாரணை நடத்தி வருகின்றனர். அதாவது இந்த வழக்கு தொடர்பாக தற்போது விசாரிக்கப்படும் சயான் என்பவர் கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்தவ இவரிடம் தனிப்படை போலீசார் இரண்டாவது முறையாக விசாரணை நடத்தி வருகின்றனர். கோவை காவலர் பயிற்சி மைதானத்தில் உள்ள அலுவலகத்தில் மேற்கு மண்டல ஐஜி சுதாகர் தலைமையிலான தனிப்படை போலீசார் […]
ஒழுங்கீனமாக நடந்தால் டி.சி. சான்றிதழில் நீக்கம் குறித்து குறிப்பிடப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல். தமிழகத்தில் மாணவர்கள், ஆசிரியர்களுக்கு உடல் ரீதியாகவோ, மன ரீதியாகவோ தொந்தரவு தந்தால், TC, Conduct Certificate-ல் எந்த காரணத்துக்காக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பதைக் குறிப்பிட்டு, பள்ளியில் இருந்து நிரந்தரமாக நீக்கப்படுவார்கள் என தமிழக சட்டப்பேரவையில் பேசிய அமைச்சர் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் எச்சரிக்கை விடுத்துள்ளார். எனவே, ஆசிரியர்களிடம் மாணவர்கள் ஒழுங்கீனமாக நடந்து கொள்ள கூடாது. ஒழுங்கீனமாக நடக்கும் […]
உண்மையைச் சொன்னால் கோவித்துக் கொள்ளாமல் அதற்கான பதிலை அமைச்சர் வழங்க வேண்டும் என சீமான் பேட்டி. சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், மின்சாரத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜிக்கும் எனக்கும் எந்தவித கருத்து வேறுபாடும் இல்லை. அன்பும் பாசமும் அதே அளவு இருந்தாலும் 10 மணி நேரம் கரண்ட் இல்லை. தமிழகத்தில் கிட்டத்தட்ட 60 ஆண்டுகள் திமுக, அதிமுகத்தான் ஆண்டுள்ளது. தமிழக்தில் உற்பத்தியில் முதலீடு செய்யவில்லை, வாங்குவதில் தான் முதலீடு செய்யப்படுகிறது. […]
கேரளாவின் காசர்கோட்டில் உள்ள பேருந்து நிலையம் அருகே ஐடியல் என்ற உணவகத்தில் விற்பனை செய்யப்பட்ட ஷவர்மாவை வாங்கி சாப்பிட்ட, கரிவள்ளூரில் வசிக்கும் தேவானந்தா என்ற 16 வயது பள்ளி மாணவி கடந்த சில தினங்களுக்கு முன்னர் உயிரிழந்த சம்பவம் தமிழகத்திலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து,தஞ்சை ஒரத்தநாடு பிரிவு சாலை பகுதியில் பெட்ரோல் பங்க் அருகே புதிதாக திறக்கப்பட்ட கிரீன் லீப் உணவகத்தில் இரு தினங்களுக்கு முன்னர் ஷவர்மா சாப்பிட்ட 3 மாணவர்களுக்கு திடீரென வாந்தி,மயக்கத்தால் உடல்நலக்குறைவு […]
உங்க கட்சியின் இரண்டு சட்டமன்ற உறுப்பினர்கள் திமுகவுடன் தொடர்பில் என திமுக நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமார் ட்வீட். திமுகவின் மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவாவின் மகன் சூர்யா சிவா சமீபத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை முன்னிலையில் அக்கட்சியில் பா.ஜ.கவில் இணைந்தார். கடந்த சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட மனு அளித்தபோதும் திருச்சி சிவாவின் மகன் சூர்யா சிவாவுக்கு திமுக வாய்ப்பு வழங்கவில்லை. இதனால் அதிருப்தி அடைந்த அவர், தனக்கு கட்சி பதவியாவது கொடுக்க வேண்டும் என கோரியதாகவும், […]
தமிழக சட்டப்பேரவையில் இன்று காவல்துறை,தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைப்பெற்று வருகிறது.அதன்படி,இது குறித்து பல்வேறு கட்சிகளின் சட்டமன்ற உறுப்பினர்கள் கேள்வி எழுப்பி வரும் நிலையில் துறை சார்ந்த அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர்.இதனிடையே,பல்வேறு புதிய அறிவுப்புகளையும் அமைச்சர்கள் வெளியிட்டு வருகின்றனர். இந்நிலையில்,நறுமணப் பூக்களைப் பயன்படுத்தி வாசனை திரவிய தொழிற்சாலையை தொடங்க முன்வரும் தொழில் முனைவோருக்கு அரசு மானியத்துடன் கூடிய கடனுதவி வழங்கப்படும் என சிறு,குறு மற்றும் நடுத்தர தொழில்துறை அமைச்சர் […]
தென்கிழக்கு வங்கக்கடலில் உருவாகிய ‘அசானி புயல்’ மேலும்,தீவிர புயலாக வலுப்பெற்று வடமேற்கு திசையில் நகர்ந்து வரும் நிலையில்,நாளை ஆந்திரா,ஒடிசா கடற்கரையை நோக்கி மத்திய கடல் பகுதியில் நிலவும் எனவும் வானிலை மையம் ஏற்கனவே தெரிவித்திருந்தது. இந்நிலையில்,மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மேற்கு வங்கக்கடலில் அசானி புயல் நிலை கொண்டுள்ளது எனவும்,தமிழகத்தில் கோவை,நீலகிரி, திருப்பூர்,தேனி,திண்டுக்கல் ஆகிய 5 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.அதே சமயம்,சென்னையை பொறுத்த வரை மிதமான […]
சென்னையில் வீடுகளை இடிப்பதற்கு இடித்ததற்கு எதிராக தீக்குளித்த இறந்தவர குடும்பத்துக்கு முதலமைச்சர் நிவாரணம் அறிவிப்பு. சென்னை ஆர்.ஏ.புரத்தில் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட கண்ணையன் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரண தொகை வழங்குவதாக முதலமைச்சர் முக ஸ்டாலின் அறிவித்துள்ளார். ஆக்கிரமிப்பு என கூறி வீடுகள் இடிபடுவதை எதிர்த்து கண்ணையன் என்பவர் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார். இந்த நிலையில், இறந்தவரின் குடும்பத்துக்கு நிவாரண தொகையை முதல்வர் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானத்துக்கு பதில் அளித்து பேசிய முதலமைச்சர் […]
சென்னை ஆர்.ஏ.புரத்தில் பெரும்பாலான ஏழை மற்றும் நடுத்தர மக்கள் வசித்து வரும் நிலையில்,அப்பகுதியில் உள்ள வீடுகள் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளதாக கூறி மாநகராட்சி நிர்வாகத்தில் இடிக்கப்பட்டு வருகின்றன. ஆனால்,இதனை கண்டித்து அப்பகுதி மக்கள் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்த நிலையில்,தன்னுடைய வீடு இடிக்கப்படுவதை கண்டித்து அப்பகுதியில் வசித்து வந்த முதியவர் ஒருவர் நேற்று தீக்குளித்தார்.பின்னர்,உடனடியாக,தீ அணைக்கப்பட்டு முதியவர் மருத்துவமனையில் ஐசியூவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில்,சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து,தற்காலிகமாக வீடுகளை இடிக்கும் […]
கொற்கையில் ஆழ்கடல் ஆய்வின் முதற்கட்ட ஆய்வு இந்த மாதம் தொடங்கப்பட உள்ளது என முதலமைச்ச அறிவிப்பு. தமிழக சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் பேசிய முதலமைச்சர் முக ஸ்டாலின், தொல்லியல் துறை சார்ந்த முக்கிய தகவலை குறித்து பேசினார். அதாவது, முதல்வரின் உரையில், சங்க கால தமிழர்கள் நன்கு முதிர்ச்சியடைந்த நகர பண்பாடு பெற்றிருந்தது கீழடி அகழாய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது. கிமு ஆறாம் நூற்றாண்டில் தமிழ் எழுத்துக்கள் இருந்ததற்கான சான்றுகள் உள்ளன. 2,600 ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்கள் […]
ஊராட்சிகளிலும் வருங்காலத்தில் உடற்பயிற்சிக் கூடம் அமைக்க அரசு நடவடிக்கை மேற்கொள்ளும் என அமச்சர் அறிவிப்பு. அனைத்து ஊராட்சிகளிலும் உடற்பயிற்சி கூடங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஊராட்சித் துறை அமைச்சர் பெரியகருப்பன் அறிவித்துள்ளார். சட்டப்பேரவையில் பேசிய அவர், சோழிங்கநல்லூர் தொகுதி, புதிய தோமையர் மலை ஒன்றியத்திற்குட்பட்ட அனைத்து ஊராட்சிகளிலும் வருங்காலத்தில் உடற்பயிற்சிக் கூடம் அமைக்க அரசு நடவடிக்கை மேற்கொள்ளும் என தெரிவித்தார். அனைத்து ஊராட்சிகளிலும் ஆண்கள் மற்றும் பெண்கள் என தனித்தனியே உடற்பயிற்சி கூடம் அமைக்க அரசு […]
பொறியியல் கலந்தாய்வை 10 இடங்களில் நடத்தலாமா என்பது குறித்து அரசு பரிசீலினை என அமைச்சர் தகவல். தமிழ்நாடு சட்டப்பேரவையில் காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் இன்று நடைப்பெறுகிறது. அப்போது, கேள்வி – பதில் நேரத்தில் பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, அண்ணா பல்கலைக்கழகத்தின் பொறியியல் கலந்தாய்வை சென்னை உட்பட தமிழ்நாடு முழுவதும் 10 இடங்களில் நடத்தலாமா என்பது குறித்து அரசு பரிசீலினை செய்து வருவதாக தெரிவித்தார். ஆன்லைன் கலந்தாய்வில் […]
ஆட்சிக்கு வந்த பிறகு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற முடியாது என்று கூறுவது அரசு ஊழியர்களுக்குச் செய்யும் பச்சைத் துரோகமாகும். கடந்த தமிழக சட்டமன்ற கூட்டத்தொடரில் பேசிய மாநில நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், தனிநபர் ஒருவருக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தில் ஆண்டுக்கு ரூ.2 லட்சம் செலவாகிறது. புதிய ஓய்வூதியத் திட்டதில் ரூ.50,000 தான் செலவாகிறது. எனவே, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவது சாத்தியமற்றது என தெரிவித்திருந்தார். பழைய ஓய்வூதியத் திட்டம் சாத்தியமில்லை என தெரிவித்ததற்கு அரசியல் கட்சி தலைவர்கள் […]
பொதுவாக பெண்கள் மிகவும் விரும்பி அணியும் பொருட்களில் தங்க நகைகள்தான் முதலிடம் வகிக்கும்.மேலும்,ஏதாவது முதலீடாக இருந்தாலும் தங்கத்தில்தான் பெரும்பாலான பெண்கள் முதலீடு செய்வார்கள்.இதனால்,தங்கத்தின் விலையை பெண்கள் எப்போதும் உற்று நோக்குவதுண்டு. இந்த வேளையில்,அட்சய திரிதியை தினத்தை முன்னிட்டு குறைந்து வந்த தங்கம் விலை நேற்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.216 உயர்ந்து விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில்,சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.32 குறைந்து ரூ.39,144-க்கு விற்பனை செய்யப்படுகிறது.அதைப்போல, 22 […]
தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் துபாய் எக்ஸ்போவில் கலந்துகொண்டு வெளிநாட்டு முதலீட்டாளர்களைச் சந்தித்து தமிழகத்துக்கு முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில்,ஐந்து நாள் அரசுமுறை பயணமாக கடந்த மார்ச் மாதம் துபாய்க்குச் சென்றிருந்தார்.இதனைத் தொடர்ந்து,முதல்வர் அபுதாபிக்கும் சென்றார். இதனைத் தொடர்ந்து,முதல்வர் மு.க.ஸ்டாலின்,லுலு குழுமத்தின் தலைவர் யூசுஃப் அலியை அபுதாபியில் சந்தித்துப் பேசினார்.அப்போது,லுலு நிறுவனத்துடன் முதல்வர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.இந்த ஒப்பந்தத்தின்படி,லுலு நிறுவனம் தமிழகத்தில் ரூ.3500 கோடி முதலீடு செய்து 3 திட்டங்களை தொடங்க உள்ளது என தெரிக்கவிக்கப்பட்டது. மேலும்,பல்வேறு […]