பொதுவாக பெண்கள் மிகவும் விரும்பி அணியும் பொருட்களில் தங்க நகைகள்தான் முதலிடம் வகிக்கும்.மேலும்,ஏதாவது முதலீடாக இருந்தாலும் தங்கத்தில்தான் பெரும்பாலான பெண்கள் முதலீடு செய்வார்கள்.இதனால்,தங்கத்தின் விலையை பெண்கள் எப்போதும் உற்று நோக்குவதுண்டு. இந்த வேளையில்,அட்சய திரிதியை தினத்தை முன்னிட்டு குறைந்து வந்த தங்கம் விலை நேற்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.216 உயர்ந்து விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில்,சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.32 குறைந்து ரூ.39,144-க்கு விற்பனை செய்யப்படுகிறது.அதைப்போல, 22 […]
தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் துபாய் எக்ஸ்போவில் கலந்துகொண்டு வெளிநாட்டு முதலீட்டாளர்களைச் சந்தித்து தமிழகத்துக்கு முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில்,ஐந்து நாள் அரசுமுறை பயணமாக கடந்த மார்ச் மாதம் துபாய்க்குச் சென்றிருந்தார்.இதனைத் தொடர்ந்து,முதல்வர் அபுதாபிக்கும் சென்றார். இதனைத் தொடர்ந்து,முதல்வர் மு.க.ஸ்டாலின்,லுலு குழுமத்தின் தலைவர் யூசுஃப் அலியை அபுதாபியில் சந்தித்துப் பேசினார்.அப்போது,லுலு நிறுவனத்துடன் முதல்வர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.இந்த ஒப்பந்தத்தின்படி,லுலு நிறுவனம் தமிழகத்தில் ரூ.3500 கோடி முதலீடு செய்து 3 திட்டங்களை தொடங்க உள்ளது என தெரிக்கவிக்கப்பட்டது. மேலும்,பல்வேறு […]
வங்கக்கடலில் இரு தினங்களுக்கு முன்னர் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று முன்தினம் மதியம் ஆழ்ந்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியதால்,தென்கிழக்கு வங்கக்கடலில் ‘அசானி புயல்’ உருவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. மேலும்,தீவிர புயலாக வலுப்பெற்ற அசானி புயல் வடமேற்கு திசையில் நகர்ந்து வரும் நிலையில்,நாளை ஆந்திரா,ஒடிசா கடற்கரையை நோக்கி மத்திய கடல் பகுதியில் நிலவும் எனவும் வானிலை மையம் தெரிவித்திருந்தது.அதே சமயம்,வங்கக் கடலில் ‘அசானி’ புயல் உருவானதை […]
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையை அடிப்படையாக கொண்டு பெட்ரோல்,டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வரும் நிலையில்,டெல்லி, மும்பை,சென்னை, கொல்கத்தா உள்ளிட்ட நாட்டின் நான்கு பெருநகரங்கள் மற்றும் முக்கிய நகரங்களில் பெட்ரோல்,டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லை. அந்த வகையில்,சென்னையில் இன்று 33-வது நாளாக மாற்றமின்றி பெட்ரோல்,டீசல் விலையில் எந்த மாற்றமுமில்லை.அதன்படி,பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.110.85-க்கும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.100.94-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதைப்போல,டெல்லியில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.105.41 ஆகவும், […]
சட்டப்பேரவையில் இன்று காவல்துறை,தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைப்பெறுகிறது. அதன்படி,இது குறித்து பல்வேறு கட்சிகளின் சட்டமன்ற உறுப்பினர்கள் கேள்வி எழுப்ப உள்ளனர்.குறிப்பாக,தமிழகத்தில் தற்போது உள்ள சட்டம் ஒழுங்கு நிலை,காவல்நிலையத்தில் விசாரணைக் கைதிகளின் மரணம் தொடர்பான பிரச்சனைகளை முன்வைக்க அதிமுக,பாஜக உள்ளிட்ட கட்சிகள் திட்டமிட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து,மானியக் கோரிக்கை விவாதத்திற்கு முதல்வர் ஸ்டாலின் அவர்கள் பதில் அளித்து,சட்டப்பேரவை விதி எண் 110 இன் கீழ் முக்கிய அறிவிப்புகளை வெளியிடவுள்ளதாக கூறப்படுகிறது. முதலைமைச்சரின் […]
சமீப காலமாக வி.கே. சசிகலா கடந்த ஆன்மீகப் சுற்றுப் பயணத்தை மேற்கொண்டு வருகிறார்.அதன்படி,கடந்த மார்ச், 21-ஆம் தேதி தனது முதற்கட்ட ஆன்மீகப் பயணத்தை தொடங்கிய சசிகலா,தொடர்ந்து தமிழகத்தில் பல்வேறு புகழ்பெற்ற கோயில்களுக்கு சென்று வருகிறார். அவ்வப்போது சசிகலாவின் ஆன்மிக பயணம் ஒரு அரசியல் பயணமாகத்தான் பார்க்கப்படுகிறது என அரசியல் விமர்சகர்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இதனைத் தொடர்ந்து,தென் மாவட்டங்களில் மீண்டும் ஆன்மீக சுற்றுபயணத்தை மேற்கொண்டுள்ள சசிகலா,சில தினங்களுக்கு முன்னர் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி […]
இலங்கையில் வாழும் மக்களுக்கு உதவிடும் வகையில், காங்கிரஸ் கட்சி சார்பில் ₹ 10 லட்சம் ரூபாய் நிதியுதவி. தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் திரு கே.எஸ்.அழகிரி அவர்கள், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை சந்தித்து ஆட்சி பொறுப்பேற்று ஓராண்டு நிறைவடைந்ததையொட்டி வாழ்த்து தெரிவித்தார். இந்த நிகழ்வின் போது, காங்கிரஸ் கட்சியின் முக்கிய அதிகாரிகள் உடனிருந்தனர். அதனை தொடர்ந்து, இலங்கையில் வாழும் மக்களுக்கு உதவிடும் வகையில், காங்கிரஸ் கட்சி சார்பில் ₹ 10 லட்சம் ரூபாய்க்கான காசோலையை […]
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 47 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் தீவிரமாக பரவி வந்த நிலையில், இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், இன்று 47 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, கொரோனாவால் பாதிக்கப்பட்டு எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை. 478 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சென்னையில் 23 […]
கோவையை சேர்ந்த ரூ.1 இட்லி பாட்டிக்கு அன்னையர் தினத்தில் கிடைத்த புதிய வீடு. கோவை ஆலாந்துறை அருகே உள்ள வடிவேலாம்பாளையத்தை சேர்ந்தவர் கமலாத்தாள். இவர் கடந்த 30 வருடங்களாக அந்த பகுதியில் இட்லி கடை வைத்து நடத்தி வருகிறார். முதலில் 25 பைசாவுக்கு இட்லி வியாபாரத்தை தொடங்கிய கமலாத்தாள், விலைவாசி உயர்வால் தற்போது ஒரு இட்லி ரூ.1-க்கு விற்பனை செய்து வருகிறார். இவருக்கு பலரும் பாராட்டுக்களை தெரிவித்து வந்த நிலையில், மஹிந்திரா குழுமம் கடந்த ஆண்டே ஆனந்த் […]
வங்கக் கடலில் ‘அசானி’ புயல் உருவானதை குறிக்கும் விதமாக 2ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றபட்டுள்ளது. வங்கக்கடலில் நேற்று முன்தினம் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று மதியம் ஆழ்ந்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியதால், தென்கிழக்கு வங்கக்கடலில் புயல் உருவாகியுள்ளதாகவும்,அதற்கு ‘அசானி’ என பெயர் வைத்துள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வரும் 12 மணி நேரத்தில் அசானி புயல் தீவிர புயலாக வலுபெற்று ஆந்திரா,ஒடிசா கடற்கரையை […]
தருமபுரம் ஆதீனத்தில் பாரம்பரியமாக நடைபெறும் பட்டினப்பிரவேச விழாவில் ஆதீனத்தை பல்லக்கில் தூக்கிச் செல்ல விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கி மயிலாடுதுறை கோட்டாட்சியர் உத்தரவு மயிலாடுதுறை மாவட்டம் தருமபுரம் ஆதீனத்தில் பாரம்பரியமாக நடைபெறும் பட்டினப்பிரவேச விழாவில் ஆதீனத்தை பல்லக்கில் தூக்கிச் செல்ல தடை விதித்து, மயிலாடுதுறை கோட்டாட்சியர் பாலாஜி உத்தரவிட்டிருந்தார். இதற்கு பாஜக,பாமக மற்றும் அதிமுக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்திருந்தன. மேலும், தனது உயிரே போனாலும் பரவாயில்லை என்றும் தானே சென்று தருமபுர ஆதீன பல்லக்கை சுமப்பதாகவும் மதுரை […]
தீக்குளித்த கண்ணையாவுக்கு உலகத்தர மருத்துவம் அளித்து அவரை காப்பாற்ற வேண்டும் பாமக நிறுவனர் ராமதாஸ் ட்வீட். சென்னை ஆர்.ஏ.புரம், கோவிந்தசாமி நகர் இளங்கோ தெருவில், அரசு நிலத்தில் குடியிருப்பவர்களை அகற்றும் பணி காவல்துறை பாதுகாப்புடன் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், 60 வயதுமிக்க கண்ணையா என்ற நபர் ஒருவர் அவரது வீட்டை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த போது இடிக்கப்படுவதை கண்டித்து தீடிரென மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்தார். இதில் பலத்த காயமடைந்த அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிற […]
அன்னையர் தின வாழ்த்து தெரிவித்து முதலவர் மு.க.ஸ்டாலின் ட்வீட். இன்று அன்னையர் தினம் அனுசரிக்கப்பட்டு வருகிற நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அன்னையர் தின வாழ்த்து தெரிவித்து ட்விட் செய்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘உயிராய் நமைச் சுமந்து காலமெல்லாம் நனைக்கும் அன்பு மழை, அன்னை! அன்பு, ஆறுதல், அரவணைப்பு, ஊக்கம் என மனிதன் ஏங்கும் உணர்வுகளுக்கு அகராதி சொல்லும் முதல் விடை, அன்னை! உயிரைத் துளைத்து அன்புக் கடலைப் புகட்டி இயற்கை […]
வங்கக்கடலில் நேற்று முன்தினம் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று மதியம் ஆழ்ந்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியதால்,தென்கிழக்கு வங்கக்கடலில் புயல் உருவாகியுள்ளதாகவும்,அதற்கு ‘அசானி’ என பெயர் வைத்துள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று காலை தெரிவித்திருந்தது. இந்நிலையில்,வரும் 12 மணி நேரத்தில் அசானி புயல் தீவிர புயலாக வலுபெற்று ஆந்திரா,ஒடிசா கடற்கரையை நோக்கி நகரும் எனவும்,இதனிடையே,தமிழகத்தில் இன்றும்,நாளையும் டெல்டா மாவட்டங்கள் உட்பட 15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக […]
கேரளாவின் காசர்கோட்டில் உள்ள பேருந்து நிலையம் அருகே ஐடியல் என்ற உணவகத்தில் விற்பனை செய்யப்பட்ட ஷவர்மாவை வாங்கி சாப்பிட்ட, கரிவள்ளூரில் வசிக்கும் தேவானந்தா என்ற 16 வயது பள்ளி மாணவி கடந்த சில தினங்களுக்கு முன்னர் உயிரிழந்த சம்பவம் தமிழகத்திலும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில்,தமிழகத்தில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர். கெட்டுப்போன சிக்கன்: அந்த வகையில்,நாகையில் உணவுப் பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டதில்,310 கிலோ கெட்டுபோன சிக்கன் பறிமுதல் செய்தனர்.அதைப்போல,மதுரையில்,அண்மையில் உணவு பாதுகாப்புத்துறை […]
நாடு முழுவதும் மீண்டும் கொரோனா பரவல் சற்று அதிகரித்துள்ள நிலையில்,கேரளாவின் கொல்லம் பகுதியில் 85 குழந்தைகளுக்கு தக்காளி வைரஸ் தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டு,மருத்துவமனையில் சிகிச்சைக்காக அவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இவ்வாறு,கொல்லம் பகுதியில் தக்காளி வைரஸ் என்ற புதிய தொற்று பரவி வருவது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில்,தக்காளிக்கும்,தக்காளி வைரஸ் தொற்றுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை எனவும்,மக்கள் பீதி அடைய வேண்டாம் எனவும் மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். மேலும்,இது தொடர்பாக சேலத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் […]
மயிலாடுதுறை மாவட்டம் தருமபுரம் ஆதீனத்தில் பாரம்பரியமாக நடைபெறும் பட்டினப்பிரவேச விழாவில் ஆதீனத்தை பல்லக்கில் தூக்கிச் செல்ல தடை விதித்து,மயிலாடுதுறை கோட்டாட்சியர் பாலாஜி நேற்று முன்தினம் உத்தரவிட்டிருந்தார்.இதற்கு பாஜக,பாமக மற்றும் அதிமுக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்திருந்தன. இதனையடுத்து,தனது உயிரே போனாலும் பரவாயில்லை என்றும் தானே சென்று தருமபுர ஆதீன பல்லக்கை சுமப்பதாகவும் மதுரை ஆதீனம் தெரிவித்தார்.மேலும்,அண்மையில் தமிழக ஆளுநர் தருமபுர ஆதீன மடத்துக்கு சென்றதே தருமபுர ஆதீனத்தை பல்லக்கில் தூக்கி செல்ல தடை விதிக்க காரணம் எனவும் […]
நேற்று முன்தினம் வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று மதியம் ஆழ்ந்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது என்று இந்திய வானிலை மையம் அறிவித்தது.அதன்பின்னர்,ஆழ்ந்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியதால் வங்கக்கடலில் இன்று புயல் உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில்,தென்கிழக்கு வங்கக்கடலில் புயல் உருவாகியுள்ளதாகவும்,அதற்கு ‘அசானி’ என பெயர் வைத்துள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த புயல் அடுத்த 24 மணி நேரத்தில் இது தீவிர […]
தமிழகத்தில் பைக் டாக்ஸிக்கு அனுமதி வழங்கப்படுவதில்லை என்று போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு ஆணையரகம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் பைக் டாக்ஸிகள்,வணிக நோக்கங்களுக்காக இரு சக்கர வாகனங்களைப் பயன்படுத்துவது அனுமதிக்கப்படவில்லை என்று தகவல் எஸ்.ஆர். தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் வழக்கறிஞர் காட்வின் ஷட்ராக் தகவல் கேட்ட நிலையில்,போக்குவரத்து ஆணையர் அலுவலகத்தின் பொதுத் தகவல் அதிகாரி (PIO) உதவிச் செயலர் பதில் அளித்துள்ளார். இதனிடையே,கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் மின்சார வாகனங்கள் உட்பட அனைத்து வகையான இருசக்கர […]
சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் தக்காளி விலை அதிகரித்துள்ளது.அதன்படி,நாட்டு தக்காளி ஒரு கிலோ ரூ.42-க்கு விற்கப்படுகிறது.மேலும்,பெங்களூரு தக்காளி கிலோ ரூ.45-க்கு விற்பனை செய்யப்படுகிறது.இரண்டு வாரங்களுக்கு முன்னதாக ரூ.35-க்கு விற்கப்பட்ட தக்காளி விலை இன்று சற்று அதிகரித்துள்ளது. அதே சமயம்,முட்டைகோஸ் ஆனது கிலோ ரூ.20-ரூ.25க்கும்,ஒரு கிலோ காலிபிளவர் ரூ.18-ரூ.20க்கும் ,உருளைக்கிழங்கு கிலோ ரூ.20 முதல் ரூ.26 வரை என கணிசமாக உயர்ந்து விற்பனை செய்யப்படுவதாக கூறப்படுகிறது. பெட்ரோல்,டீசல் விலை உயர்வால் காய்கறிகளின் வரத்து குறைவு மற்றும் விளைச்சல் பாதிப்பால் […]