நேற்று முன்தினம் வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று மதியம் ஆழ்ந்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது என்று இந்திய வானிலை மையம் அறிவித்தது.அதன்பின்னர்,ஆழ்ந்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியதால் வங்கக்கடலில் இன்று புயல் உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில்,தென்கிழக்கு வங்கக்கடலில் புயல் உருவாகியுள்ளதாகவும்,அதற்கு ‘அசானி’ என பெயர் வைத்துள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த புயல் அடுத்த 24 மணி நேரத்தில் இது தீவிர […]
தமிழகத்தில் பைக் டாக்ஸிக்கு அனுமதி வழங்கப்படுவதில்லை என்று போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு ஆணையரகம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் பைக் டாக்ஸிகள்,வணிக நோக்கங்களுக்காக இரு சக்கர வாகனங்களைப் பயன்படுத்துவது அனுமதிக்கப்படவில்லை என்று தகவல் எஸ்.ஆர். தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் வழக்கறிஞர் காட்வின் ஷட்ராக் தகவல் கேட்ட நிலையில்,போக்குவரத்து ஆணையர் அலுவலகத்தின் பொதுத் தகவல் அதிகாரி (PIO) உதவிச் செயலர் பதில் அளித்துள்ளார். இதனிடையே,கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் மின்சார வாகனங்கள் உட்பட அனைத்து வகையான இருசக்கர […]
சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் தக்காளி விலை அதிகரித்துள்ளது.அதன்படி,நாட்டு தக்காளி ஒரு கிலோ ரூ.42-க்கு விற்கப்படுகிறது.மேலும்,பெங்களூரு தக்காளி கிலோ ரூ.45-க்கு விற்பனை செய்யப்படுகிறது.இரண்டு வாரங்களுக்கு முன்னதாக ரூ.35-க்கு விற்கப்பட்ட தக்காளி விலை இன்று சற்று அதிகரித்துள்ளது. அதே சமயம்,முட்டைகோஸ் ஆனது கிலோ ரூ.20-ரூ.25க்கும்,ஒரு கிலோ காலிபிளவர் ரூ.18-ரூ.20க்கும் ,உருளைக்கிழங்கு கிலோ ரூ.20 முதல் ரூ.26 வரை என கணிசமாக உயர்ந்து விற்பனை செய்யப்படுவதாக கூறப்படுகிறது. பெட்ரோல்,டீசல் விலை உயர்வால் காய்கறிகளின் வரத்து குறைவு மற்றும் விளைச்சல் பாதிப்பால் […]
தியாகத்தின் மொத்த உருமாய்,வாழும் தெய்வமாய் நம் அனைவருக்கும் பிடித்தவருமான வார்த்தைகளால் ஒப்பிடமுடியாத அன்னையர்களின் சிறப்பை போற்றும் வகையில் ஆண்டுதோறும் மே 8 ஆம் தேதி அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது. அந்த வகையில்,நாடு முழுவதும் இன்று அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது. இதனால்,தங்களை பெற்ற அன்னையர்களுக்கு பிள்ளைகள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.அதே சமயம்,தாயாக சிறந்து விளங்கும் அனைவருக்கும் அரசியல் தலைவர்களும் அன்னையர் தின வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில்,தியாகத்தின் திருவுருவமாக இருக்கும் அன்னையர்களுக்கு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அன்னையர் […]
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையை அடிப்படையாக கொண்டு பெட்ரோல்,டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வரும் நிலையில்,டெல்லி, மும்பை,சென்னை, கொல்கத்தா உள்ளிட்ட நாட்டின் நான்கு பெருநகரங்கள் மற்றும் முக்கிய நகரங்களில் பெட்ரோல்,டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லை. அந்த வகையில்,சென்னையில் இன்று 32-வது நாளாக மாற்றமின்றி பெட்ரோல்,டீசல் விலையில் எந்த மாற்றமுமில்லை.அதன்படி,பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.110.85-க்கும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.100.94-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதைப்போல,டெல்லியில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.105.41 ஆகவும், […]
நாடு முழுவதும் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்று தீவிரமாக பரவிய நிலையில் அதனைக் கட்டுப்படுத்த மத்திய,மாநில அரசுகள் தீவிர முயற்சிகளை மேற்கொண்டன.அந்த வகையில்,மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு தடுப்பூசி போடும் பணிகளை துரிதப்படுத்தின.இதனால்,கொரோனா தொற்று பரவல் வெகுவாக குறைந்து வந்தது.ஆனால்,கடந்த சில நாட்களாக தற்போது மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. இதனால், தடுப்பூசி போடும் பணிகள் மீண்டும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில்,தமிழகம் முழுவதும் இன்று (மே 8 ஆம் தேதி) சூப்பர் மெகா தடுப்பூசி முகாம் 1 […]
வங்கக்கடலில் நேற்று முன்தினம் காலை தெற்கு அந்தமான் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்தது.இதனையடுத்து,இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் எனவும் பின்னர் மே 8 ஆம் தேதி புயலாக வலுபெற வாய்ப்புள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது.அவ்வாறு உருவானால் இந்த புயலுக்கு ‘அசானி புயல்’ என்று வானிலை ஆய்வாளர்கள் பெயரிடுவார்கள் என்று கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து,வங்கக்கடலில் […]
ஆன்லைன் சூதாட்டத்தால் அம்பத்தூர் ஆயுதப்படை காவலர் தற்கொலை செய்து கொண்டது நெஞ்சை உலுக்குகிறது என ஈபிஎஸ் ட்வீட். அம்பத்தூர் அருகே கள்ளிக்குப்பம் பகுதியில் ஆயுதப்படை காவலர் சரவணகுமார் (வயது 30) என்பவர் துப்பாக்கியால் தன்னை தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. உயிரிழந்த காவலரின் உடலை கைப்பற்றி காவல்துறை தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகிறது. ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட சூதாட்டத்தில் அதிக பணத்தை இழந்ததால் ஆயுதப்படை காவலர் சரவண குமார் தற்கொலை செய்து கொண்டதாக முதல் […]
பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா இயக்கம் குறித்து ஆளுநர் தெரிவித்த கருத்துகள் அதிர்ச்சி அளிக்கின்றன என சீமான் பதிலடி. சென்னை கல்லூரி ஒன்றில் நடைபெற்ற புத்தக விழாவில் பேசிய தமிழ்நாடு ஆளுநர் ஆர்என் ரவி, பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா (Popular Front of India) ஆபத்தான அமைப்பு என குற்றசாட்டினார். மனித உரிமை அமைப்பு, மாணவர்கள் அமைப்பு என்ற முகமூடிகளை பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா பயன்படுத்துகிறது. இந்த அமைப்பு பயங்கரவாத இயக்கங்களுக்கு பின்புலமாக செயல்பட்டு […]
தமிழ்நாட்டில் திமுக அரசு பொறுப்பேற்று ஓராண்டு நிறைவடைந்ததை முன்னிட்டு ஆளுநர் ஆர்.என்.ரவி வாழ்த்து. தமிழகத்தில் கடந்த ஆண்டு நடந்து முடிந்த சட்டமன்ற பொதுத்தேர்தலில் தேர்தலில் திமுக கூட்டணி மாபெரும் வெற்றி பெற்று ஆட்சியை அமைத்தது. அதன்படி, 2021 மே மாதம் 7-ம் தேதி ஆளுநர் மாளிகையில், ‘முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்’ என்றவாறு முதலமைச்சராக திமுக தலைவர் முக ஸ்டாலின் பொறுப்பேற்றார். அப்போது, ஸ்டாலினுடன் 33 அமைச்சர்களும் பொறுப்பேற்றனர். ராஜகண்ணப்பன், உள்ளிட்டச் சிலரின் இலாக்காக்கள் மட்டும் […]
விசாரணை கைதி விக்னேஷ் கொலை வழக்கில் மேலும் 4 காவலர்கள் கைது. சென்னையில் விசாரணை கைதி விக்னேஷ் கொலை வழக்கில் மேலும் 4 காவலர்கள் எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். அதன்படி, தலைமை செயலக காவல் நிலைய தலைமை காவலர் குமார், ஊர்காவல்படை காவலர், ஆயுதப்படை காவலர் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கு தொடர்பாக எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் காவல் நிலைய எழுத்தர் […]
அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வுதிய திட்டம் மூலம் பென்சன் வழங்குவது சாத்தியமில்லை என அமைச்சர் அறிவிப்பு. தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பேசிய மாநில நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், டிஎன்பிஎஸ்சி, டிஆர்பி, சீருடைப் பணியாளர் தேர்வாணையம் உள்ளிட்ட அரசுப் பணியிடங்களுக்கான போட்டித்தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க, விண்ணப்பதாரர்களுக்கு ஒருங்கிணைந்த பிரத்யேக கைபேசி செயலி அறிமுகம் செய்யப்படும் என அறிவித்துள்ளார். அந்த செயலி மூலம் தேர்வு அறிவிப்பு, பாடத்திட்டங்கள், தேர்வு முடிவுகள் ஆகியவற்றை தெரிந்து கொள்ளலாம், விண்ணப்பதாரர்கள் சான்றிதழ் சரிப்பார்த்தல் போன்ற பணிகளையும் […]
மாணவர்கள் காலையில் சிற்றுண்டி சாப்பிட ஏதுவாக அரை மணி நேரம் ஒதுக்கப்பட உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தகவல். தமிழகத்தில் ஆரம்ப மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கான வேலை நேரத்தை மாற்ற பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அரசு பள்ளிகளில் காலை சிற்றுண்டி வழங்கப்பட உள்ளதால் நேரத்தை மாற்றி அமைக்க முடிவு என தகவல் கூறப்படுகிறது. மாணவர்கள் காலையில் சிற்றுண்டி சாப்பிட ஏதுவாக அரை மணி நேரம் ஒதுக்கப்பட உள்ளது என்றும் ஜூன் 13ஆம் தேதி பள்ளிகள் திறந்ததும் புதிய […]
சென்னை எழும்பூர் வேனல்ஸ் சாலை அன்னை ஈ.வெ.ரா மணியம்மையார் சாலை என பெயர் மாற்றம் செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. திராவிடர் கழக தலைவர் கீ.வீரமணியின் கோரிக்கையை ஏற்று தமிழக அரசு உத்தரவிட்டது. இதுதொடர்பான அரசாணையில், பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவன செயலாளர் கி.வீரமணி அவர்களிடமிருந்து பெறப்பட்ட கடிதத்தில், பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்களை 95 ஆண்டு காலம் பாதுகாத்து, அவரது இயக்கமாம் திராவிடர் இயக்கத்தை, மேலும் ஐந்தாண்டு காலம் காத்தவரும், ஏராளமான ஆதரவற்ற […]
வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி பின்னர் நாளை (மே 8 ஆம் தேதி) புயலாக வலுபெற வாய்ப்புள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது.அவ்வாறு உருவானால் இந்த புயலுக்கு ‘அசானி புயல்’ என்று வானிலை ஆய்வாளர்கள் பெயரிடுவார்கள் என்றும் இந்த புயல் தொடர்ந்து நகர்ந்து,மே 10 ஆம் தேதி ஆந்திரா ஒடிசா கடற்கரையை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில் கரையைக் கடக்கும் என தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில்,வங்கக்கடலில் […]
தஞ்சை தேர் விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் நேரில் ஆறுதல். தஞ்சாவூர் அருகே களிமேடு கிராமத்தில் கடந்த 27-ஆம் தேதி அதிகாலை சித்திரை திருவிழாவையொட்டி நடைபெற்ற திருவிழாவின்போது, சப்பரம் மீது மின்சாரம் பாய்ந்ததால் 11 பேர் பலியான நிலையில், 14 பேர் காயமடைந்தனர். இந்த விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு பிரதமர், முதல்வர் மற்றும் அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து, நிவாரண உதவிகளும் அறிவிக்கப்பட்டது. அந்தவகையில், தேர் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு அதிமுக […]
சென்னையில் உள்ள கல்லூரி ஒன்றில் சமீபத்தில் நடைபெற்ற மறைந்த லெப்டினென்ட் ஜெனரல் சப்ரோடோ மித்ராவின் புத்தக விழாவில் பேசிய தமிழ்நாடு ஆளுநர் ஆர்என் ரவி, பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா (Popular Front of India) ஆபத்தான அமைப்பு என தமிழக ஆளுநர் ஆர்என் ரவி கடும் குற்றசாட்டை முன்வைத்துள்ளார். மனித உரிமை அமைப்பு, மாணவர்கள் அமைப்பு என்ற முகமூடிகளை பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா பயன்படுத்துகிறது என்றும் நாட்டை சீர்குலைப்பதே அந்த அமைப்பின் நோக்கம் எனவும் […]
முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்ற குரல் ஆளுநர் மாளிகையில் ஒலித்து ஓராண்டாகிறது என திண்டுக்கல் லியோனி பேச்சு. பள்ளி பாடத்திட்டங்கள் குறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய பாடநூல் கழக தலைவர் திண்டுக்கல் லியோனி, முதலமைச்சர் மற்றும் ஆளுநரின் அதிகாரங்கள் மற்றும் திராவிட தலைவர்களின் வாழ்க்கை வரலாறு உள்ளிட்டவைகள் குறித்து பள்ளி பாடப்புத்தகங்களில் சேர்க்க பரிந்துரைகள் வந்துள்ளன. பாடத்திட்டத்தை வடிவமைக்கும் மாநில கல்வியில் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்திற்கு பரிந்துரைகள் வரப்பட்டுள்ளன. முதலமைச்சர், கல்வி அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு […]
திமுக ஆட்சி பொறுப்பேற்று இன்றுடன் ஓராண்டு நிறைவு பெற்றதை முன்னிட்டு,தமிழ்நாடு சட்டப்பேரவையில் பேசிய முதலமைச்சர் முக ஸ்டாலின், துளி போன்ற இந்த ஓராண்டு காலத்தில் கடல் போன்ற சாதனைகளை செய்துள்ளோம் என்ற பெருமிதத்துடன் தான் மாமன்றத்தில் நின்று கொண்டிருப்பதாக தெரிவித்தார். இதனைத்தொடர்ந்து பேசிய முதலமைச்சர், 5 முக்கிய திட்டங்களை அறிவித்தார்.அதன்படி, அரசு பள்ளியில் (1 முதல் 5) மாணவர்களுக்கு காலையில் சத்தான சிற்றுண்டி வழங்கப்படும். முதற்கட்டமாக சில மாநகராட்சிகளிலும், நகராட்சிகளிலும், தொலைதூர கிராமங்களிலும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது,படிப்படியாக […]
வங்கக்கடலில் நேற்று காலை தெற்கு அந்தமான் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்தது.இதனையடுத்து,இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வடமேற்கு திசையில் நகர்ந்து,இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில்,வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழ்த்த தாழ்வு மண்டலமாக மாறி பின்னர் நாளை (மே 8 ஆம் தேதி) புயலாக வலுபெற வாய்ப்புள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.அவ்வாறு உருவானால் […]