நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான வாக்கெடுப்பு பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் 8 மணிக்கு மேல் நடைபெறும் என தகவல்.
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு இரவு 8 மணிக்கு மேல் நடக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான வாக்கெடுப்புக்கு அந்நாட்டு நாடாளுமன்றம் இன்று கூடியது. எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அவைக்கு வந்த நிலையில், பிரதமர் இம்ரான்கான் மற்றும் அவரது ஆதரவு எம்பிக்கள் வரவில்லை என தகவல் வெளியாகியிருந்தது.
இம்ரான்கானுக்கு எதிரான அவரது கட்சி எம்பிக்கள் 30 பேரும் அவைக்கு வந்திருப்பதாக தகவல் கூறப்பட்டது. இதனால் நம்பிக்கை வாக்கெடுப்பு அடுத்த வாரத்திற்கு தள்ளி போகலாம் என்று பாக். சட்டத்துறை அமைச்சர் ஃபவத் சவுத்ரி தகவல் தெரிவித்ததாக தகவல் வெளியான நிலையில், நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான வாக்கெடுப்பு பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் 8 மணிக்கு மேல் நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது.