பாலமேடு ஜல்லிக்கட்டு : சிறந்த மாடுபிடி வீரருக்கு கார் பரிசு!

It has been announced that a car will be awarded to the best cowboy selected in the Jallikkattu competition at Palamet.

பாலமேட்டில் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கி நடைபெற்று வருகிறது. போட்டியில் தேர்வாகும் சிறந்த மாடுபிடி வீரருக்கு கார் பரிசாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டியானது, பொங்கலையொட்டி பல இடங்களில் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் நேற்று அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு நடைபெற்றது.  தற்போது பாலமேட்டில் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இந்த போட்டியை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தொடங்கி நிலையில், இதில், 800 காளைகள் மற்றும் 651 மாடுபிடி வீரர்களும் பங்கேற்கின்றனர். இந்த போட்டியில் தேர்வாகும் சிறந்த மாடுபிடி வீரருக்கு கார் பரிசாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.