பாஜக மாநில தலைவர் அண்ணாமலையுடன், பழனிசாமி சந்திப்பு.!

பாஜக மாநில தலைவர் அண்ணாமலையுடன், முன்னாள் முதலமைச்சர் பழனிசாமி சந்தித்து பேசியுள்ளார்.

பாஜக மாநில தலைவர் அண்ணாமலையுடன், முன்னாள் முதலமைச்சர் பழனிசாமி சந்தித்து பேசியுள்ளார்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பாஜகவின் ஆதரவு குறித்து ஆலோசிக்க மாநில தலைவர் அண்ணாமலையுடன் சந்தித்து பேசியுள்ளார். பழனிசாமி இல்லத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பில் அதிமுக சார்பில் பழனிசாமி மற்றும் ஜெயக்குமார் ஆகியோர் அண்ணாமலையுடன் ஆலோசனை நடத்தினர்.

நேற்று டெல்லி சென்று திரும்பிய அண்ணாமலையுடன் இன்று இந்த சந்திப்பு, பாஜகவின் ஆதரவு இபிஎஸ் தரப்பிற்கா, அல்லது ஓபிஎஸ் தரப்பிற்கா என்பது குறித்து நடைபெற்றிருக்கிறது.