நவம்பர் 19 ஆம் தேதி நேரில் ஆஜராக முரசொலி அறக்கட்டளை நிர்வாக இயக்குநர் உதயநிதி ஆஜராகவேண்டும் என நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
அசுரன் படத்தை பார்த்துவிட்டு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பஞ்சமி நிலம் குறித்து கருத்து கூறியிருந்தார்.இதனையடுத்து பாமக நிறுவனர் ராமதாஸ் முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தில் கட்டப்பட்டது என்று தெரிவித்தார்.இதனைத்தொடர்ந்து முதல் பஞ்சமி நிலம் குறித்த விவாதம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இதனிடையே பஞ்சமி நிலத்தில் முரசொலி அலுவலகம் உள்ளது எனபாஜகவை சேர்ந்த சீனிவாசன் தேசிய தாழ்த்தபட்டோர் நல ஆணையத்தில் புகார் அளித்தார். இந்த விவகாரம் தொடர்பாகநேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க தமிழக அரசின் செயலாளருக்கு நோட்டீஸ் அனுப்பி உத்தரவு பிறப்பித்தது தேசிய தாழ்த்தபட்டோர் நல ஆணையம்.
இந்த நிலையில் முரசொலி அறக்கட்டளையின் நிர்வாக இயக்குநர் உதயநிதி ஸ்டாலினுக்கு தேசிய தாழ்த்தப்பட்டோர் நல ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.அதாவது வருகின்ற 19-ஆம் தேதி சென்னை சாஸ்திரி பவனில் உதயநிதி ஸ்டாலின் நேரில் ஆஜராக வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : தமிழ் சினிமாவில் 80,90களில் கொடிகட்டி பறந்த காமெடியன்களில் மிக முக்கியமானவர் கவுண்டமணி. சினிமாவில் நடிப்பதை தாண்டி வேறு…
மதுரை : சென்னை காட்டாங்குளத்தூரில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் சைவ சித்தாந்த மாநாடு நடைபெற்றது. அதில் கலந்து கொள்ள…
சென்னை : நேற்று முதல் கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திர வெயில் காலம் ஆரம்பமாகியது என வானிலை ஆய்வு…
காஷ்மீர் : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதியன்று காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்ததை…
மயிலாடுதுறை : நேற்று (மே 4) மயிலாடுதுறையில் திமுக சார்பில் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக எம்.பி…
சென்னை : நேற்று (மே 4) இந்தியா முழுவதும் நீட் (NEET) நுழைவுத்தேர்வு நடைபெற்றது. இது இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான…