அப்போலோவில் இருந்த ஜெயலலிதாவை சந்திக்காத தினகரன், அவர் பெயரில் கட்சி ஆரம்பிக்க என்ன அருகதை இருக்கிறது என நான் கேட்டது தான் கோபம் என்று பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
unknown nodeதமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய தினகரன் -பன்னீர் செல்வம் சந்திப்பு ஏற்பட்டதாக தங்க தமிழ்செல்வம் பரபரப்பு பேட்டியளித்தார்.இந்நிலையில் இது குறித்து விளக்கம் அளித்த பன்னீர் செல்வம் பேசியதவாது:
unknown nodeஜெயலலிதாவிடம் என்னை அறிமுகப்படுத்தியாக தினகரன் கூறுகிறார்; அப்போது தினகரன் அதிமுகவில் எல்.கே.ஜி , நான் அதிமுகவில் பல்கலைக்கழக மாணவன்டிடிவி தினகரன் கேட்டுக்கொண்டதால் 2017 ஜூலை 12 ஆம் தேதி பொதுவான நண்பர் வீட்டில் அவரை சந்தித்தேன்.முதல்வர் எடப்பாடி பழனிசாமியை ஆட்சியை விட்டு இறக்கவேண்டும் என்று டிடிவி தினகரன்தான் கூறினார்.மனம் திருந்தி நல்ல வார்த்தை சொல்வார் என்ற நம்பிக்கையில்தான் டிடிவி தினகரனை சந்தித்தேன், ஆனால் கட்சியை கைப்பற்றவே அவர் நினைத்தார்.
unknown nodeமூன்று முறை முதல்வராக இருந்துள்ளேன், அந்த திருப்தியே போதும்,ஆட்சியை கவிழ்த்து விட்டு முதல்வராக வேண்டும் என்ற எண்ணம் எனக்கு இல்லை எனக்கிருக்கும் நல்ல பெயரை கெடுக்க வேண்டுமென தினகரனும் அந்த கொடிய கூடாரமும் வேலை செய்து கொண்டிருக்கிறது.அதிமுக தொண்டர்களிடையே ஏற்பட்டுள்ள எழுச்சியை கண்டு, தினகரன் குழப்பமான மனநிலைக்கு சென்றுள்ளார் தினகரன் பொய்யான குற்றச்சாட்டை என் மீது சுமத்தி வருகிறார். நான் இருக்கும் இயக்கத்துக்கு விசுவாசமாக இருக்க வேண்டும் என நினைப்பவன் என்று தெரிவித்தார்.
DINASUVADU