பரமக்குடி பள்ளி சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றம் செய்து தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு.
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி தாலுக்கா புத்துநகரில் கடந்த பிப்ரவரி மாதம் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்த சிறுமியை சிலர் கூட்டு பாலியல் கொடுமைக்கு உள்ளாக்கியது குறித்து பரமக்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் குற்ற எண் 5/2023 பதிவு செய்யப்பட்டு புலன் விசாரணையில் உள்ளது.
இவ்வழக்கில் தொடர்புடைய 5 குற்றவாளிகளும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவ்வழக்கில் சிறப்பு கவனம் செலுத்தி புலன் விசாரணை செய்யும் வகையில் டிஜிபி சைலேந்திர பாபு, குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வுத் துறைக்கு (CB CID) மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார்.