பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு, இதை கற்றுக்கொடுங்கள்..! செஃப் தாமு அறிவுரை..!

பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளுக்கு, சமையல் செய்ய கற்றுக் கொடுக்க வேண்டும் என்று செஃப் தாமு கூறினார்.

பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளுக்கு, சமையல் செய்ய கற்றுக் கொடுக்க வேண்டும் என்று செஃப் தாமு கூறினார்.

சென்னை அண்ணா நகரில் ஆர்.ஆர்.ஆர் என்ற பெயரில் ஓட்டல் ஒன்று தொடங்கப்பட்டுள்ளது.  சின்ஹா ஓட்டல் திறப்பு விழா இன்று நடைபெற்றது. இந்த திறப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக சென்னை மேயர் பிரியா, செஃப் தாமு ஆகியோர் கலந்து கொண்டு ஓட்டலைத் திறந்து வைத்தனர்.

இந்த திறப்பு விழாவில் பேசிய செஃப் தாமு, புதிதாக திறக்கப்பட்ட ஆர்.ஆர்.ஆர் ஓட்டலில் அனைத்து வகையான உணவுகளும் கிடைக்கும், அதுமட்டுமல்லாமல் உணவின் தரம் ஒருபோதும் குறையாது என்று கூறினார். மேலும், இந்த ஓட்டலுக்கு அவரால் கன்டுபிடிக்கப்பட்ட 10 உணவுகளை அளிக்கபோவதாகவும், என்னுடைய உணவுக்காக காத்துக்கொண்டிருந்தவர்கள் அனைவரும் ஆர்.ஆர்.ஆர் ஓட்டலுக்கு வந்து சாப்பிட்டு மகிழுமாறு கூறினார்

தொடர்ந்து பேசிய அவர், ஆர்.ஆர்.ஆர் ஓட்டல் தமிழ்நாடு மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் புதிதாக ஓட்டல்கள் திறக்க வாழ்த்தினார். மேலும், இந்த கொரோனா காலகட்டத்தில் அனைவரும் சமைக்க ஆரம்பித்து விட்டனர். தயவு செய்து பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளுக்கு, சமையல் செய்ய கற்றுக் கொடுக்க வேண்டும் என்று வலியறுத்தினார். செஃப் தாமு, தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் “குக் வித் கோமாளி” நிகழ்ச்சியில் இரு நடுவர்களுள் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.