வீடியோ: பாமகவினர் போராட்டம்.. ரயில் மீது சரமாரி கல்வீச்சு!

Suddenly a mob ran towards the nearby railway tracks and hurled stones at the oncoming train. More than 100 protesters have been arrested.

வன்னியர்களுக்கு 20 சதவிகிதம் இடஒதுக்கீடு வழங்க கோரி சென்னையில் உள்ள தமிழ்நாடு தேர்வாணையம் முன்பு பாமக சார்பில் இன்று போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த போராட்டத்தில் தொடர்ந்து தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து பாமக தொண்டர்களும் கட்சி மற்றும் நிர்வாகிகளும் சென்னை நோக்கி வந்தனர்.

அவர்களை சென்னை எல்லையான பெருங்களத்தூர் சோதனைச்சாவடியில் போலீசார் தடுத்து நிறுத்தினர். சில முக்கிய நிர்வாகிகளுக்கு மட்டுமே சென்னைக்குள் செல்ல அனுமதி வழங்கப்பட்டது. இந்நிலையில், சென்னைக்குள் செல்ல அனுமதி கோரி பாமக கட்சி தொண்டர்கள் பெருங்களத்தூர்- ஜிஎஸ்டி நெடுச்சாலையின் இரு புறமும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது திடீரென ஒரு கும்பல், அருகில் இருந்த ரயில் பாதைகளை நோக்கி ஓடி அந்த வழியாக வந்த ரயில் மீது சரமாரியாக கற்களை வீசித் தாக்குதல் நடத்தினர். போராட்டத்தில் ஈடுபட்ட 100-க்கும் மேற்பட்ட பாமாகவினர் கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

unknown node