பேனா நினைவுச் சின்னம் வழக்கு – உச்சநீதிமன்றம் உத்தரவு

மெரினா கடலில் பேனா நினைவுச் சின்னம் அமைப்பது தொடர்பான வழக்கில் தேசிய பசுமைத்தீர்ப்பாயம் அல்லது உயர்நீதிமன்றத்தை அணுக உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பேனா

Supreme court of india

மெரினா கடலில் பேனா நினைவுச் சின்னம் அமைப்பது தொடர்பான வழக்கில் தேசிய பசுமைத்தீர்ப்பாயம் அல்லது உயர்நீதிமன்றத்தை அணுக உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பேனா நினைவுச் சின்னத்தை எதிர்த்து நல்லதம்பி உள்ளிட்டோர் தொடர்ந்து வழக்குகளை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

பேனா நினைவு சின்னத்தால் மீன்வளம் பாதிக்கப்படும் என தமிழகத்தை சேர்ந்த 3 பேர் பொதுநல வழக்கு தொடுத்திருந்தனர். இந்த நிலையில், பேனா நினைவுச் சின்னம் தொடர்பான வழக்கை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் தலைமையிலான அமர்வு உத்தரவிட்டது.

மேலும், இவ்வழக்கு விசாரணையின்போது, கலைஞர் பேனா நினைவு சின்னத்தால் சுற்றுச் சூழல் பாதிக்கப்படும் எனில், பசுமை தீர்ப்பாயத்தை அணுகலாம் அல்லது உயர்நீதிமன்றத்தை நாடலாமே? என்றுள்ளனர். ஆனால், பொதுநல வழக்கின் கீழ் மனுதாக்கல் செய்தது ஏன்? நேரடியாக உச்சநீதிமன்றத்தை அணுகுவது ஏன்? என்று நீதிபதிகள் எழுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.