மக்களே எச்சரிக்கை..! தீவிரமடையும் வடகிழக்கு பருவமழை...!- இந்திய வானிலை ஆய்வு மையம்

அடுத்த 2 வாரங்களில் வடகிழக்கு பருவமழை தீவிரமடையும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்.

அடுத்த 2 வாரங்களில் வடகிழக்கு பருவமழை தீவிரமடையும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்.

தமிழகத்தில் சமீப நாட்களாக பல மாவட்டங்களில் பருவமழை பெய்துவருகிறது. அந்த வகையில் அக்டோபர் 28-ஆம் தேதி  நவம்பர் 3-ஆம் தேதி வரை 42% கூடுதலாக மழை பெய்துள்ளது.

இந்நிலையில்,  அடுத்த 2 வாரங்களில் வடகிழக்கு பருவமழை தீவிரமடையும் என்றும், தமிழ்நாட்டில் கடலோரப்பகுதி, உள்மாவட்டம் மற்றும் தென் மாவட்டங்களில் இயல்பை விட அதிக மழை பெய்யக்கூடும் என்றும்  இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.