மக்களே எச்சரிக்கை : இன்னும் 12 மணி நேரம் தான் இருக்கு..!

According to the Meteorological Department, the depression will develop in 12 hours.

காற்றழுத்த தாழ்வுப்பகுதி 12 மணி நேரத்தில் உருவாகிறது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பருவமழை தொடங்கி உள்ள நிலையில் தமிழகத்தில் பரவலாக பல்வேறு பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் பல்வேறு மாவட்டங்களிலும் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் சாலைகளில் நீர் தேங்கி காணப்படுவதால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தமிழகத்துக்கு அடுத்த இரண்டு நாட்களுக்கு ரெட்அலர்ட் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. தற்போது தென்கிழக்கு வங்கக்கடலில் 12 மணி நேரத்தில் காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாகும் எனவும் வானிலை ஆய்வு மையத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது.