தேர்தலில் வாக்களிக்காதவர்களை தண்டிக்க உத்தரவிட முடியாது.. சென்னை ஐகோர்ட் மறுப்பு!

தேர்தலில் வாக்களிக்காதவர்களை தண்டிக்க சட்டம் இயற்றுமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட கோரிய வழக்கில், உத்தரவிட முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் திட்டவட்டமாக

Madras High court

தேர்தலில் வாக்களிக்காதவர்களை தண்டிக்க சட்டம் இயற்றுமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட கோரிய வழக்கில், உத்தரவிட முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்துள்ளது. இதனால் ஜனநாயக கடமையை ஆற்றாதவர்கள் (தேர்தலில் வாக்களிக்காதவர்கள்) அரசின் சலுகைகளை அனுபவிப்பதாக தொடரப்பட்ட வழக்கு முடித்து வைக்கப்பட்டது.

தேர்தலில் வாக்களிக்காதவர்களை தண்டிக்க சட்டம் வகுக்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால், இதற்கு சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்து வழக்கை முடித்து வைத்தது.

இந்த வழக்கு விசாரணையின்போது, வாக்களிப்பதை கட்டாயமாக்குவது தொடர்பாக நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்யப்பட்ட தனிநபர் மசோதா நிராகரிக்கப்பட்டதாக மத்திய அரசு தரப்பில் வாதம் வைக்கப்பட்டது. இதுபோன்று, வாக்களிப்பது என்பது தனி நபரின் தனிப்பட்ட சுதந்திரம் என சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம் வைத்துள்ளது.