300 கிலோ சின்ன வெங்காயத்தை பறிகொடுத்த தமிழக விவசாயி! போலீஸ் தீவிர விசாரணை!

தற்போது நாடு முழுவதும் வெங்காயத்தின் விலை கடுமையாக ஏற்றம் கண்டுள்ளது. ஒரு கிலோ வெங்காயம் 100 ரூபாய்க்கு மேல் அதாவது கிட்டத்தட்ட 120 ரூபாய் சில இடங்களில் 200 ரூபாய் கூட வெங்காயம் விற்பனை ஆகிறது. அந்த அளவிற்கு வெங்காயம் விலை ஏற்றம் கண்டுள்ளது. தமிழகத்தில் வெங்காயம் விளைவிக்கும் பரப்பளவு குறைவு என்பதாலும், மேலும் இங்கு வேர் அழுகல் நோயினால் அந்த சின்ன வெங்காயம் விளைச்சல் பாதிக்கப்படுவதாலும் தமிழகத்தில் கடுமையான விலை ஏற்றம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் பெரம்பலூர் மாவட்டம் கூத்தனூரை சேர்ந்த முத்து கிருஷ்ணன் என்பவர் தனது தோட்டத்தில் சின்ன வெங்காயத்தை விதைப்பதற்காக சுமார் 300 கிலோ அளவிற்கு வாங்கி வைத்துள்ளார். அதனை மழை காரணமாக தார்பாய் போட்டு மூடி தனது தோட்டத்தில் வைத்துள்ளார். மறுநாள் விதைப்பதற்காக வந்த போது தான் வெங்காயம் திருடப்பட்டுள்ளது தெரிந்தது.
பின்னர் இதுகுறித்து அக்கம் பக்கத்தில் விசாரித்து விட்டு , பின்னர் போலீஸில் புகார் தெரிவித்துள்ளார் போலீஸ் நியூ சார்பாக 300 கிலோ வெங்காயத்தை திருடிய தயார் என விசாரணை நடத்தி வருகிறது
லேட்டஸ்ட் செய்திகள்
“தொடர்ந்து தவறான தகவல்களை பரப்பி பொய்ப் பிரச்சாரம் செய்யும் பாகிஸ்தான்” – விக்ரம் மிஸ்ரி.!
May 10, 2025
”விமானப்படை தளங்களை தாக்கும் அனைத்து முயற்சிகளும் முறியடிப்பு” – கர்னல் சோஃபியா குரேஷி.!
May 10, 2025