சிபிஎஸ்சி பாடத்தில் இருந்து பெரியார் குறித்து நீக்கம் ! பாஜக அரசு திட்டமிட்டே நீக்கியுள்ளது – வைகோ

சிபிஎஸ்சி பாடத்தில் இருந்து பெரியார் கருத்துகள் குறித்து பாஜக அரசு திட்டமிட்டே நீக்கியுள்ளது என்று வைகோ தெரிவித்துள்ளார்.
கொரோனா காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.இதன் விளைவாக பள்ளிகள்,கல்லூரிகள் என அனைத்துமே மூடப்பட்டு இருந்தது.எனவே இதனை கருத்தில் கொண்டு மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் அண்மையில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.அதாவது,மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு ,மன அழுத்தத்தை குறைக்கும் வகையில் 30 % பாடங்கள் குறைக்கப்படுவதற்காக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில்,சிபிஎஸ்இ 9 மற்றும் 10-ஆம் வகுப்புகளின் தமிழ் பாடப்புத்தகத்தில் இருந்து பெரியார் அவர்களின் சிந்தனைகள் ,மா.பொ.சி எல்லை போராட்ட வரலாறு,ராஜ ராஜ சோழனின் “மெய் கீர்த்தி” போன்ற பாடங்களும் , தமிழ்நாட்டில் உள்ள பெண்களின் சிறப்பை விளக்கும் மங்கையராய் பிறப்பதற்கு உள்ளிட்ட பாடங்கள் நீக்கப்பட்டுள்ளது.இந்திய தேசிய ராணுவத்தில் தமிழரின் பங்கு எனும் குறிப்பு அடியோடு நீக்கப்பட்டுள்ளது.மேலும் திருக்குறள் ,சிலப்பதிகாரம் குறித்தவையும் நீக்கம் செய்யப்பட்டுள்ளது. தமிழர்களின் வரலாறு,கலை ,இலக்கியம் உள்ளிட்டவற்றை பாஜக அரசு திட்டமிட்டே நீக்கியுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!
May 3, 2025