சென்னை கட்டுப்பாட்டில் உள்ளது.! மற்ற மாவட்டங்களில் அதிகரித்துள்ள கொரோனா பாதிப்பு.!

சென்னை தற்போது கட்டுப்பாட்டில் உள்ளது. தமிழ்நாட்டின் மற்ற பகுதிகளிலும் தொற்று எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
மதுரை மேலும் 450 கொரோனா தொற்று எண்ணிக்கை பதிவானது. இந்நிலையில் மொத எண்ணிக்கை 4,199 ஆக உள்ளது. திருவள்ளூர் 360 மற்றும் விருதுநகரில் 328 புதிய தொற்று பதிவு செய்துள்ளன. சென்னை கட்டுப்பாட்டில் உள்ளது எனவும் தமிழ்நாட்டின் பிற பகுதிகளிலும் கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்துள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையின் நிலைமை பெரும்பாலும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டபோதும், மாநிலத்தின் தெற்கு மற்றும் வடக்கு முனைகளில் உள்ள மாவட்டங்கள் நேற்று கொரோனா எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. நேற்று மட்டும் தமிழ்நாட்டில் மொத்தம் 4,526 பேருக்கு கொரோனா. அதில் 1,078 பேர் சென்னையில் உள்ளவர்கள்.
சென்னையைப் போலவே, ஜூலை மாதத்தின் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் மதுரையிலும் முழுமையான ஊரடங்கு செயல்படுத்தப்படும். நேற்று தமிழகத்தில் மொத்தம் 67 இறப்புகள் பதிவாகியுள்ளன, இதனால் மொத்த எண்ணிக்கை 2,099 ஆக உள்ளது. உயிரிழந்தவர்களில் சிவகங்காவைச் சேர்ந்த 13 வயது சிறுமி, நீண்டகால சிறுநீரக நோய்களுடன் இறந்தது.
லேட்டஸ்ட் செய்திகள்
பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!
May 3, 2025