மதுரையில் ரத யாத்திரை நடத்த அனுமதி – மாநகர காவல் ஆணையருக்கு உத்தரவு.!

The Madurai branch of the High Court has ordered the Municipal Commissioner of Police to grant permission to conduct a chariot procession in Madurai.

மதுரையில் ரத யாத்திரை நடத்த அனுமதி வழங்குமாறு மாநகர காவல் ஆணையருக்கு உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவு.

அயோத்தி ராமர் கோவில் கட்டுமானத்திற்கு நிதி திரட்ட மதுரையில் ரத யாத்திரை நடத்த அனுமதி வழங்குமாறு சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளை மாநகர காவல் ஆணையருக்கு உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

மதுரையில் 100 வார்டுகளிலும் ரத யாத்திரை நடத்த நிபந்தனைகளுடன் அனுமதிவழங்க காவல்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அயோத்தியில் கட்டப்படும் ராமர் கோவிலுக்காக நிதி திரட்ட ரத யாத்திரை நடத்த அனுமதி கோரி செல்வகுமார் என்பவர் விண்ணப்பித்திருந்தார்.

கொரோனா கட்டுப்பாடுகளை காரணம் காட்டி ரத யாத்திரைக்கு மாநகர காவல்துறை முதலில் அனுமதி மறுக்கப்பட நிலையில், தற்போது உயர்நீதிமன்றம் மதுரை கிளை அனுமதி வழங்க உத்தரவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.