உடுமலை சங்கரின் நினைவு தினத்தை முன்னிட்டு சாதி மறுப்பு திருமண விழிப்புணர்வு கூட்டம் நடத்த அனுமதி.
உடுமலை சங்கரின் நினைவு தினத்தை முன்னிட்டு நினைவேந்தல், சாதி மறுப்பு திருமணம் குறித்து விழிப்புணர்வு கூட்டம் நடத்த சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. விழிப்புணர்வு கூட்டத்துக்கு உரிய பாதுக்காப்பு வழங்கவும் காவல்துறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சங்கர் சமூகநீதி அறக்கட்டளை தரப்பில் கவுசல்யா தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.
சட்டம் – ஒழுங்கு பிரச்சனை என்பதால் அனுமதி தரக்கூடாது, வேண்டுமெனில் உள் அரங்கில் நடத்தி கொள்ளலாம் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆவண கொலை தொடர்பான விழிப்புணர்வு கூட்டங்கள் பொதுவெளியில் நடந்தால் தான் மாக்களை சென்றடையும் என நீதிபதி கருத்து தெரிவித்தார்.