பிக்பாஸ் நிகழ்ச்சி ஒரு கலாசார சீரழிவு- அமைச்சர் ஜெயக்குமார்

பிக்பாஸ் நிகழ்ச்சி ஒரு கலாசார சீரழிவு என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
சென்னை லயோலா கல்லூரியில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பேசினார்.அவர் பேசுகையில்,அரசு இல்லாமல் கல்வியும், விவசாயமும் முன்னேற முடியாது. இதை அரசு உணர்ந்து செயல்பட்டால் சமூகம் செல்லவேண்டிய இடத்தை அது விரைவில் சென்றடைய முடியும்.
கரைவேட்டி கட்டியவர்கள் பார்த்து கொள்வார்கள் என்பதால்தான் அரசியலில் கறை படிந்து இருக்கிறது.குடும்ப அரசியல் தான் தமிழகத்தில் செய்ய முடியும் என்றால் நான் எனது குடும்பத்தை பெரிது படுத்திக் கொள்வேன்.இளைஞர்களே என்னுடைய குடும்பம், இளைஞர்களே நாளைய தலைவர்கள் என்று பேசினார்.
இந்த நிலையில் இது குறித்து மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில்,கமல் திடீரென கருத்து கூறுவார், அதேபோல் திடீரென காணாமல் போய்விடுவார். தேர்தல் நேரத்தில் மட்டும் வருவார்.அதன் பின் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு சென்றுவிடுவார்.
பிக்பாஸ் நிகழ்ச்சி ஒரு கலாசார சீரழிவு.அந்த வீடு அலிபாபா குகை போன்றது.வீட்டில் உள்ளவர்கள் பயந்து வெளியில் ஓடிவருகின்றனர் என்று கூறினார்.மேலும் வசூல் ராஜா MBBS படம் மூலம் நீட் தேர்வில் ஆள் மாறாட்டத்திற்கு வித்திட்டவர் கமல்ஹாசன் என்றும் தெரிவித்தார்.
லேட்டஸ்ட் செய்திகள்
பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!
May 3, 2025