தமிழகத்தில் இயங்கும் பிளாஸ்டிக் கேரி பேக் கம்பெனிகளுக்கு தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியம் தடை விதித்துள்ளது.
பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு எதிராக உலக அளவில் எதிர்ப்புகள் உருவாக்கி வருகிற நிலையில், ஜனவரி 1ம் தேதி முதல் தமிழகத்தில் மக்காத தன்மை கொண்ட பிளாஸ்டிக் பொருட்களின் உபயோகத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, தமிழகத்தில் இயங்கி வரும் பிளாஸ்டிக் கேரி பேக் கம்பெனிகளுக்கு தடை விதித்து தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மூலம் நோட்டிஸ் வழங்கப்பட்டுள்ளது.