தனி விமானம் மூலம் சென்னை வந்தடைந்தார் பிரதமர் மோடி

PM lands in Chennai. He will take a chopper from Airport to INS Adyar

பல்வேறு திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக தனி விமானம் மூலம் பிரதமர் நரேந்திர மோடி சென்னை வந்தடைந்தார்.

பிரதமர் மோடி தமிழகம் வருவதை முன்னிட்டு சென்னையில் பல முக்கிய சாலைகளில் போக்குவரத்து மாற்றப்பட்டுள்ளது.தமிழகம் வந்துள்ள பிரதமர் மோடி ஹெலிகாப்டர் மூலம் அடையாறு ஐ.என்.எஸ். விமானப்படை தளத்திற்கு செல்கிறார். பின்னர், கார் மூலம் நேரு உள்விளையாட்டு அரங்கத்திற்கு செல்கிறார்.அதனை தொடர்ந்து, ரூ.3770 கோடி செலவில் முடிக்கப்பட்டுள்ள சென்னை மெட்ரோ ரயில் பகுதி-1 விரிவாக்கத்தைத் தொடங்கி வைத்து, வண்ணாரப்பேட்டையிலிருந்து, விம்கோ நகர் வரையிலான பயணிகள் ரயில் சேவையை துவக்கி வைக்கிறார் பிரதமர் மோடி.மேலும் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்க உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.