பிரதமரின் மித்ரா பார்க் திட்டத்திற்கு விருதுநகரை தேர்வு செய்ததற்கு பிரதமருக்கு, முதல்வர் ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.
பிரதமர் மித்ரா பார்க்(PM MITRA Park) திட்டத்தின் ஒரு பகுதியாக ஜவுளி பூங்கா அமைப்பதற்கு தமிழ்நாட்டின் விருதுநகரை தேர்வு செய்தமைக்கு, பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் தனது நன்றியை தெரிவித்துள்ளார். இதன் மூலம் தென் தமிழ்நாட்டின் ஜவுளித் துறை வளர்ச்சிக்கு இது ஒரு பெரிய ஊக்கமாக இருக்கும்.
இது குறித்து முதல்வர் ஸ்டாலின் தனது ட்விட்டரில், எங்கள் சிப்காட் வளாகத்தில் 1052 ஏக்கர் நிலம், இந்த திட்டத்திற்கு தயாராக உள்ளது, இந்த ஜவுளி பூங்கா திட்டத்தின் மூலமாக இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தி செயல்படுத்த தயாராக உள்ளது என கூறியுள்ளார்.
unknown node