முதலமைச்சரிடம் வெள்ள சேதம் குறித்து கேட்டறிந்த பிரதமர் மோடி!

pm modii

சென்னை புயல் மற்றும் மழை பாதிப்புகள் குறித்து தொலைபேசி வாயிலாக தொடர்புகொண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் பிரதமர் மோடி கேட்டறிந்தார். மிக்ஜாம் புயல் (Michaung cyclone)  மற்றும் கனமழை காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்கள் கடும் பாதிப்பை சந்தித்துள்ளது.

இதில் குறிப்பாக சென்னை மற்றும் சுற்றுவட்டாரத்தில் கனமழை கொட்டி தீர்த்த நிலையில், பல இடங்களில் மழைநீர் தேங்கி வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. இதனால்  மக்களின் இயல்பு வாழ்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.  இதில், சில இடங்களில் மழைநீர் வடிந்த நிலையில், பல இடங்களில் மழைநீர் வடியாமல் இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த சூழலில் அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். ஒருசில இடங்களில் மக்கள் போராட்டத்திலும் களமிறங்கியுள்ளனர் என செய்திகள் வெளியாகியுள்ளது. இருப்பினும், மழையால் பாதித்த இடங்களில் நிவாரணம் மற்றும் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

மிக்ஜாம் புயல் பாதிப்பு.! தமிழக அரசின் 5060 கோடி ரூபாய் கோரிக்கை.! மத்திய அமைச்சர் தமிழகம் வருகை.!

தமிழக அரசு பல இடங்களில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மழைவெள்ளத்தில் சிக்கியுள்ள மக்களை மீட்கும் பணிகளில் மீட்புப்படையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். புயல் காரணமாக பாதிக்கப்பட்ட பகுதிகளை சீர் செய்ய, ரூ.5.060 கோடி நிதியுதவி வழங்கக்கோரி முதல்வர் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

வெள்ள பாதிப்புகளை நேரில் பார்வையிட மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜநாத் சிங் இன்று சென்னை வர உள்ளார். இந்த நிலையில் ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக சென்னை உள்பட 4 மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகள் குறித்து தொலைபேசி வாயிலாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் பிரதமர் மோடி கேட்டறிந்தார்.

அப்போது, மிக்ஜாம் புயலால் தமிழகம் சந்தித்துள்ள பாதிப்புகளை பிரதமரிடம் முதல்வர்  எடுத்துரைத்தார் என்றும்  வெள்ள பாதித்த பகுதிகளில் ஆய்வு செய்ய மத்திய குழுவை அனுப்பி வைக்க பிரதமரும் முதலமைச்சர் கோரிக்கை வைத்துள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இதற்கு, அனைத்து உதவிகளும் செய்யப்படும் என பிரதமர் உறுதி அளித்துள்ளார். இதனிடையே, வெள்ள நிவாரண பணிக்கு இடைக்கால நிவாரணமாக ரூ.5,060 கோடி தேவை என முதலமைச்சர் ஸ்டாலின் எழுதிய கடிதத்தை பிரதமர் மோடியை நேரில் சந்தித்து திமுக எம்பி டிஆர் பாலு வழங்கியிருந்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்