புதிய விமான நிலைய முனையத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி!

சென்னை விமான நிலையத்தில் ஒருங்கிணைந்த பன்னாட்டு முனையத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி.

சென்னை விமான நிலையத்தில் ஒருங்கிணைந்த பன்னாட்டு முனையத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி.

தெலுங்கானா மாநிலத்தில் இன்று காலை பல்வேறு நலதிட்டங்கள் மற்றும் வந்தே பாரத் ரயில் சேவைகளை தொடங்கி வைத்த பிரதமர் மோடி, தமிழகத்தில் ரூ.5000 கோடி அளவிலான திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக சற்று முன் சென்னை விமான நிலையம் வந்தடைந்தார். ஹைதராபாத்திலிருந்து தனி விமானம் மூலம் சென்னை வந்தடைந்த பிரதமர் மோடியை, ஆளுநர் மற்றும் முதல்வர் வரவேற்றனர்.

இந்த நிலையில், சென்னை விமான நிலையத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த பன்னாட்டு முனையத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி. ரூ.1,260 கோடி செலவில் சர்வதேச தரத்தில் அழகிய வடிவில் கட்டப்பட்டுள்ள முனையத்தை தொடங்கி வைத்த பின்னர் பிரதமர் மோடி பார்வையிட்டார். திறன் அதிகாரிக்கப்பட்ட முனையம் மூலம் ஆண்டுதோறும் 3 கோடி பயணிகளை கையாளும் திறனை விமான நிலையம் பெறும் என கூறப்படுகிறது.

சென்னையை விமான நிலையத்தின் புதிய முனையத்தை பிரதமரும், முதல்வரும் பார்வையிட்டனர். மத்திய அமைச்சர் எல் முருகன், சிந்தியா உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.  இதன்பின் சென்னை விமான நிலையத்தில் இருந்து அடையாறு ஐஎன்எஸ்-க்கு ஹெலிகாப்டர் மூலம் சென்ற பிரதமர் மோடி, வந்தே பாரத் ரயில் சேவையை கொடியசைத்து தொடங்கி வைக்க இருக்கிறார்.