பாமகவின் பொது நிழல் நிதிநிலை அறிக்கை வெளியானது..!

Published by
murugan

தமிழக நிதிநிலை அறிக்கை சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ளது. ஒவ்வொரு நிதிநிலை அறிக்கையின் முன் பாமக சார்பாக நிழல் நிதி நிலை அறிக்கை வெளியிடப்படும். இந்நிலையில், இன்று சென்னை தியாகராய நகரில்  பாமகவின் 20-வது பொது நிழல் நிதிநிலை அறிக்கையை பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டார். இந்த நிகழ்ச்சியில் அன்புமணி ராமதாஸ், ஜி.கே. மணி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

பாமக சார்பில் 20-வது பொது நிழல் நிதி நிலை அறிக்கை வெளியிட்டப்பட்டுள்ளது.

அதில்,

  • தமிழ்நாட்டில் மாவட்டத்திற்கு குறைந்தபட்சம் 25 பள்ளிகள் வீதம் தமிழகம் முழுவதும் 1,000 பள்ளிகள் மாதிரிப் பள்ளிகளாக மாற்றப்படும். இந்தப் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை இருக்கும்.
  • பள்ளிக் கல்வித் துறைக்கு நடப்பாண்டில் ரூ.75,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
  • தமிழகத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளும் மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளுக்கு இணையாக தரம் உயர்த்தப்படும். ஒவ்வொரு மாணவருக்கும் கல்வி வழங்க ஆண்டுக்கு ரூ.37,500 செலவிடப்படும்.
  • சட்டம் – ஒழுங்கைப் பாதுகாக்க கண்டிப்பான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
  • சென்னை தவிர்த்த தமிழகத்தின் மற்ற பகுதிகள் 4 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு மண்டலத்திற்கும் ஒரு டிஜிபி நிலை அதிகாரி பொறுப்பு அதிகாரியாக நியமிக்கப்படுவார்.
  • மயிலாடுதுறை, திருப்பத்தூர் மாவட்டங்களில் நடப்பாண்டில் மருத்துவக் கல்லூரிகள் அமைக்கப்படும்.
  • தமிழகத்தில் மும்மொழிக்கொள்கை அறிமுகப்படுத்தப்படாது. அதனால் இந்தி, சமஸ்கிருதம் உள்ளிட்ட பிற மொழிகள் எதுவும் மாணவர்கள் மீது திணிக்கப்படாது
  • தமிழ்நாட்டில் கரும்பு உற்பத்தியை ஊக்குவிக்கும் நோக்குடன் உழவர்கள் உற்பத்தி செய்யும் நாட்டுச் சர்க்கரையை ஒரு கிலோ ரூ.60 என்ற விலையில் தமிழக அரசே கொள்முதல் செய்யும்.
  • மணல் குவாரிகள் திறக்கப்படாது
  • வேளாண் சார்ந்த கடன்களின் தேவை அதிகரித்திருப்பதால், அவற்றை வழங்குவதற்கு வசதியாக, கூட்டுறவுச் சங்கங்களுக்கு தமிழக அரசின் சார்பில் ரூ.5,000 கோடி மறுமுதலீடு வழங்கப்படும்.
  • தமிழ்நாட்டில் இருந்து இடம் பெயர்ந்து சென்று உலகம் முழுவதும் சுமார் 150 நாடுகளில் வாழும் தமிழர்களின் குழந்தைகளுக்கு தமிழ் கற்பிப்பதற்காக இணையவழி தமிழ் கற்பித்தல் சேவை தொடங்கப்படும். இணையதளம் தொடங்கப்பட்டு, அதன் மூலம் தமிழ் கற்பிக்கப்படும்.
  • பள்ளிக் கல்வித் துறைக்கு நடப்பாண்டில் ரூ.75,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
  • சி.பி.எஸ்.சி. பாடத்திட்டத்தைவிட சிறப்பானதாக தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்டம் வலுப்படுத்தப்படும்.
  • தமிழக மாணவர்களுக்கு ரூ.18,000 கோடி கல்விக்கடன் வழங்கப்பட்டுள்ளது. இவற்றில் வாராக்கடனின் அளவு ரூ.2,000 கோடி ஆகும். இந்தக் கடன் உடனடியாக தள்ளுபடி
  • உயர்கல்வியின் தரத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும்.
  • மதுரை எய்ம்ஸ் மருத்துவ நிறுவனத்தில் நடப்பாண்டில் 50 மாணவர்கள் எம்.பி.பி.எஸ். படிப்புக்கு சேர்க்கப்பட்டுள்ளனர். அடுத்த ஆண்டு இது 150 இடங்களாக உயர்த்தப்படும்.
  • ஆட்சியை மட்டுமே பிடிப்பது பாமகவின் நோக்கமில்லை தமிழகத்தை முன்னேற்றுவதே பாமகவின் முக்கியமான நோக்கம் ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Recent Posts

CSK vs KKR : கொல்கத்தாவுக்கு பறிபோனது பிளே ஆஃப்.., நீண்ட நாள் கழித்து சென்னை திரில் வெற்றி.!

CSK vs KKR : கொல்கத்தாவுக்கு பறிபோனது பிளே ஆஃப்.., நீண்ட நாள் கழித்து சென்னை திரில் வெற்றி.!

கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…

8 hours ago

சென்னையில் நாளையும் போர்க்கால ஒத்திகை…, எதெல்லாம் துண்டிக்கப்படும்.?

சென்னை : இந்தியா முழுவதும் நடந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஒரு பகுதியாக மே 7-ம் தேதியான இன்று சென்னை மற்றும்…

8 hours ago

CSK vs KKR : மாஸ் பவுலிங்.., விக்கெட்டுகளை அள்ளிய நூர் அகமது.! சென்னைக்கு இது தான் இலக்கு.!

கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…

10 hours ago

ரசிகர்கள் ஷாக்: டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார் ரோஹித் சர்மா.!

மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…

11 hours ago

”அசோக வனத்திற்கு செல்லும்போது அனுமன் பின்பற்றிய கொள்கையே ஆபரேஷன் சிந்தூர்” – ராஜ்நாத் சிங்.!

டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ராணுவம் வெற்றிகரமாக தீவிரவாதிகள் முகாம்களை அழித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர்…

11 hours ago

KKR vs CSK : வெற்றி பெருமா சென்னை.? பிளே ஆஃப் வாய்ப்பை பெருமா கொல்கத்தா.? டாஸ் விவரம் இதோ.!

கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் 57-வது போட்டியில், நடப்பு சீசனில் லீக் சுற்றுடன் நடையை கட்டவுள்ள சென்னை மற்றும் பிளே…

12 hours ago