திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா மனைவியின் மறைவிற்கு,கவிஞர் வைரமுத்து இரங்கல் தெரிவித்துள்ளார்.
திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசாவின் மனைவி பரமேஸ்வரி புற்று நோயால் பாதிக்கப்பட்டு கடந்த 6 மாதங்களாக ரெலா மருத்துவமனையில் சிகிக்சை பெற்று வந்த நிலையில்,நேற்று இரவு 07.05 மணிக்கு சிகிக்சை பலனின்றி பரமேஸ்வரி உயிரிழந்தார்.
இந்நிலையில்,ஆ.ராசாவின் மனைவி பரமேஸ்வரி மறைவிற்கு,கவிஞர் வைரமுத்து இரங்கல் தெரிவித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது,”புயலடித்த பொதுவாழ்க்கை சகோதரர் ஆ.ராசாவுடையது. அப்போதெல்லாம் தோளோடு தாங்கி வீழாது காத்த வேர்த்துணை அவர்தம் அறிவு மனைவி பரமேஸ்வரி. அவருக்கு என் அஞ்சலி. என் நெஞ்சில் சாய்த்துக்கொண்டு சொல்கிறேன் ஆ.ராசாவுக்கு ஆழ்ந்த இரங்கல்.”,என்று தெரிவித்துள்ளார்.
unknown node