காவலர்கள் பணியில் இருக்கும் போது செல்போன் பயன்படுத்தக் கூடாது… சென்னை பெருநகர காவல் ஆணையர்.!

காவலர்கள் பணியில் இருக்கும் போது செல்போன் பயன்படுத்தக் கூடாது என அறிவுறுத்தல்.
காவலர்கள் தாங்கள் பணியில் இருக்கும் போது, மொபைல் போன் உபயோகப்படுத்தக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. புதிதாக பதவியேற்றுள்ள சென்னை பெருநகர காவல் துறையின் காவல் ஆணையராக சந்தீப் ராய் ரத்தோர், இந்த தகவலை அனைத்து காவல் அதிகாரிகளுக்கும் தெரிவித்துள்ளார்.
இது குறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில், பாதுகாப்பு மற்றும் சாலைப்போக்குவரது பணிகளில் இருக்கும் காவலர்கள் செல்போன் பயன்படுத்துவதால் பணியை சரியாக செய்யமுடிவதில்லை, மேலும் விழிப்புணர்வுடன் இருந்து சமூகப்பணிகளை முடிக்கவேண்டியது கட்டாயமாகிறது என்பதை வலியுறுத்தி இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
மேலும் அனைத்து காவலர்களும் இந்த அறிவிப்பை பின்பற்றி சட்டம் ஒழுங்கை காப்பாற்ற வேண்டும் எனவும், அனைத்து காவல் நிலைய தகவல் பலகையில் இந்த அறிக்கை ஒட்டப்படவேண்டும் எனவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.