டைமன்ட் லீக்கில் கோல்டு மெடல் இல்லையா? ஒலிம்பிக் நாயகன் நீரஜ் சோப்ரா விளக்கம்.!

நீரஜ் சோப்ரா டைமன்ட் லீக்கில் தனக்கு தங்கப்பதக்கம் எதுவும் கிடைக்கவில்லை என்று அதற்கு விளக்கம் அளித்துள்ளார்.
சமீபத்தில் லாசன் டைமன்ட் லீக் விளையாட்டு போட்டியில் இந்தியாவின் ஒலிம்பிக் நாயகனான நீரஜ் சோப்ரா முதலிடம் பெற்றார். கடந்த வருடமும் ஸுரிச்சில் நடைபெற்ற டைமன்ட் லீக் விளையாட்டு போட்டியிலும் நீரஜ் சோப்ரா வென்றிருந்தார். இது குறித்து நீரஜிடம் நீங்கள் டைமன்ட் லீக்கில் தங்கப்பதக்கம் வென்றதைப்பற்றி கூறுங்கள் எனக் கேட்டபோது, அவர் அப்படி எதுவும் நான் பெறவில்லை என தெரிவித்தார்.
மேலும் இது பற்றிய குழப்பத்திற்கு, தான் விளக்கம் அளிக்க போவதாகவும் கூறிய நீரஜ், பதக்கங்கள் என்பது ஒலிம்பிக், ஆசிய விளையாட்டு போட்டிகள், காமன்வெல்த் போட்டிகள், உலக சாம்பியன்ஷிப்ஸ் போட்டிகளில் மட்டுமே கொடுக்கப்படுவது உண்டு என்றும், டைமன்ட் லீக் போன்ற போட்டிகளில் வென்றால் ட்ராபி வழங்கப்படும் பதக்கங்கள் வழங்கப்படுவது கிடையாது என்றும் விளக்கம் அளித்துள்ளார்.