பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் இருந்து 6,932 சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டம்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 16,932 சிறப்பு பேருந்துகளை இயக்க தமிழக போக்குவரத்து துறை திட்டமிட்டுள்ளது. ஜன 12, 13, 14 ஆகிய தேதிகளில் தமிழகம் முழுவதும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது தொடர்பாக அமைச்சர் சிவசங்கர் தலைமையில் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
அதன்படி, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 10-ஆம் தேதி முதல் 5 நாட்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.வரும் 10-ஆம் தேதி முதல் 14-ஆம் தேதி வரை சென்னையில் இருந்து 10,749 பேருந்துகள் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் மொத்தம் 16,932 பேருந்துகளை இயக்க போக்குவரத்துத்துறை திட்டமிட்டுள்ளதாக தகவல் கூறப்படுகிறது. வரும் 10-ஆம் தேதி முதல் 14-ஆம் தேதி சுமார் 5.37 லட்சம் பயணிகள் சிறப்பு பேருந்துகளில் பயணிப்பார்கள் என கணிக்கப்பட்டுள்ளது.