27 மாவட்டங்களில் பொங்கல் பரிசு வழங்கத் தடை- தேர்தல் ஆணையம் விளக்கம்

- பொங்கல் பரிசு வழங்கும் திட்டம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
- சென்னை உயர் நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.
ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகை வருவதை ஒட்டி அரிசி ரேஷன் அட்டை வைத்துள்ளவர்களுக்கு பொங்கல் பரிசாக ரூ.1000 வழங்கப்படும் என்றும் இதனுடன் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது.அதில், 1 கிலோ பச்சரிசி,1 கிலோ சர்க்கரை,2 அடி துண்டு கரும்பு,20 கிராம் முந்திரி,20 கிராம் உலர் திராட்சை,5 கிராம் ஏலக்காய் உள்ளிட்ட பொருட்களும் இடம்பெறும் என்று அறிவிக்கப்பட்டது.
எனவே உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளதால் பொங்கல் பரிசு வழங்கும் திட்டத்தை தள்ளிவைக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் திருவண்ணாமலையைச் சேர்ந்த அலமேலு என்பவர் வழக்கு தொடர்ந்தார்.அவரது வழக்கில் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கும் வகையில் பொங்கல் பரிசு அமைந்துவிடக்கூடாது என்று தெரிவித்தார் .இந்த வழக்கில் உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் அளித்த தகவலில், ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் 27 மாவட்டங்களில் பொங்கல் பரிசு வழங்கக் கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது என்று தெரிவித்தது.இதனால் பொங்கல் பரிசு வழங்க தடை கோரிய வழக்கை ஜனவரி 10-ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிமன்றம்.