நடிகர் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை தொடங்கி நடத்தி வருகிறார்.
பிரபல நடிகை கோவை சரளா கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யத்தில் இணைந்தார்.
நடிகர் கமல்ஹாசன் பிப்ரவரி மாதம் 21-ந் தேதி மக்கள் நீதி மய்யம் கட்சியைத் தொடங்கினார். மதுரையில் நடந்த பொதுக்கூட்டத்தில் கட்சியின் பெயர், கொடி ஆகியவற்றை அறிவித்தார்.
unknown nodeமக்கள் நீதிமைய்யம் தலைவர் கமல்ஹாசன் சமீப காலமாக தனது அரசியல் பயணத்தை தொடர்ந்து அதிகரித்து வருகிறார்.
இதேபோல் அவர் கட்சிகளையும் நேரடியாகவும் சாடி வருகின்றார். அவ்வப்போது சமூக வலைதளங்களிலும் கருத்துகளை பதிவிடுகிறார்.மேலும் நேரடியாகவும் களத்தில் இறங்கியும் ஈடுபட்டுவருகிறார்.
அதேபோல் நடிகை ஸ்ரீப்ரியா மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்தார்.பின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைமைப் பேச்சாளராக ஸ்ரீப்ரியா நியமிக்கப்பட்டார்.
அப்போது அவர் கூறுகையில், ரஜினியின் கருத்தை என்னால் ஏற்க முடியவில்லை.ஏற்க முடியாத காரணத்தால் தான் கமல்ஹாசனுடன் இணைந்து செயல்படுகிறேன் என்று தெரிவித்தார்.
unknown nodeஇந்நிலையில் இன்று தமிழ் சினிமாவின் பிரபல நடிகை கோவை சரளா கமல்ஹாசனின் முன்னிலையில் மக்கள் நீதி மய்யத்தில் இணைந்தார்.
கோவை சரளா 25 ஆண்டு திரைப்பட வாழ்க்கையில் 750 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.