மனைவியிடம் ஆபாச பேச்சு.! அரிவாளுடன் பைனான்ஸ் நிறுவனத்தில் நுழைந்த கணவர்.! அடுத்து என்ன நடந்தது.?

- தேனி மாவட்டம் கம்பத்தில் இயங்கி வரும் தனியார் பைனான்ஸ் நிறுவனத்தின் அலுவலகத்தில் திடீரென கையில் அரிவாளுடன் நுழைந்து மிரட்டிய சம்பவம்.
- அந்த நபர் தமது மனைவிக்காக பைனான்ஸ் மூலம் செல்போன் வாங்கியதாகவும், அதன் மாதாந்திர தொகையை கட்ட சொல்லி ஒருவர் பைனான்ஸ் நிறுவனத்தில் இருந்து மனைவிக்கு ஆபாசமாக பேசியதாகவும் தெரிவித்தார்.
தேனி மாவட்டம் கம்பத்தில் இயங்கி வரும் தனியார் பைனான்ஸ் நிறுவனத்தின் அலுவலகத்தில் திடீரென கையில் அரிவாளுடன் நுழைந்த ஒருவர், தமது மனைவியிடம் செல்போனில் ஆபாசமாக பேசியது யார் என்று அரிவாளை காட்டி மிரட்டியுள்ளார். பின்னர் அங்கு பணிபுரியும் ஊழியர்கள் அரிவாளுடன் மிரட்டிய நபாரால் அச்சமடைந்த அலுவலக ஊழியர்கள் அந்த நபரிடம் சமரசமாக பேசினர்.
இந்நிலையில், அந்த நபர் தமது மனைவிக்காக தனியார் பைனான்ஸ் மூலம் செல்போன் வாங்கியதாகவும், அதன் மாதாந்திர தொகையை கட்ட சொல்லி ஒருவர் பைனான்ஸ் நிறுவனத்தில் இருந்து மனைவிக்கு ஆபாசமாக பேசியதாகவும் தெரிவித்தார். ஒரு கட்டத்தில் அங்கிருந்த ஊழியர் ஒருவரை வெட்டுவதற்கு முயற்சி செய்த அந்த நபர், பின்னர் அங்கிருந்து வெளியேறினார். மிரட்டல் விடுத்த நபர் கம்பம் வடக்கு பட்டியை சேர்ந்த கண்ணன் என்பது தெரியவந்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!
May 3, 2025