மின் கட்டண வழக்கு .! தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைப்பு.!

ஊரடங்கு காலத்தில் முந்தைய மின் கட்டண தொகையின் அடிப்படையில் புதிய மின் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ஊரடங்கால் வீடுகளில் பயன்படுத்தப்பட்ட மின்சார யூனிட்டின் அளவு யாருக்கும் தெரியாது என தமிழக அரசு தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டது.
மேலும், தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் அனுமதி பெற்றே மின் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது என தமிழக அரசு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. இதுகுறித்து கருத்து தெரிவித்த நீதிபதிகள், பொதுமக்கள் வீடுகளிலேயே முடங்கி இருந்ததால் மின் கட்டணம் அதிகரித்திருக்க வாய்ப்புள்ளது என்று கூறினார். மேலும், இந்த வழக்கை தேதி குறிப்பிடாமல் சென்னை உயர்நீதிமன்றம் தள்ளி வைத்தது.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025