மாவட்ட ஆட்சியர்கள் உடனான முதல்வரின் ஆலோசனை ஒத்திவைப்பு

கொரோனா தடுப்பு தொடர்பாக மாவட்ட ஆட்சியர்கள் உடனான முதல்வரின் ஆலோசனை இன்றைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கொரோனா தடுப்பு தொடர்பாக மாவட்ட ஆட்சியர்கள் உடனான முதல்வரின் ஆலோசனை இன்றைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா நோயின் தாக்கத்தை கட்டுப்படுத்துவது குறித்து மருத்துவ நிபுணர்களுடன் முதலமைச்சர் பழனிசாமி ]ஆலோசனை கூட்டம் நடத்தினார்.இந்த கூட்டத்தில் மருத்துவர்கள் ஊரடங்கை நீட்டிக்க கோரிக்கை விடுத்தனர். நாடு முழுவதும் வரும் 14 ஆம் தேதியோடு ஊரடங்கு நிறைவடையும் நிலையில், நேற்று  மாலை 5 மணிக்கு தமிழக அமைச்சரவை கூட்டம் கூடுகிறது என முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்திருந்தார்.

அதன்படி சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் பழனிச்சாமி தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இதன் காரணமாக கொரோனா தடுப்பு தொடர்பாக மாவட்ட ஆட்சியர்கள் உடனான முதல்வரின் ஆலோசனை நேற்று நடைபெற இருந்த நிலையில் இன்றைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.