TNPSC 3-ம் கட்ட கலந்தாய்வு ஒத்திவைப்பு..!

The third phase interview of TNPSC Group-2, which was scheduled to be held the next day, has been postponed due to the storm.

நிவர் புயல் காரணமாக நாளை மறுநாள் நடைபெற இருந்த டிஎன்பிஎஸ்சி குரூப்-2 மூன்றாம் கட்ட நேர்முகத்தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதற்கு முன் நாளை  தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நடைபெறவிருந்த கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் இணை பேராசிரியர்களுக்கான யு.ஜி.சி நெட் தேர்வு  ஒத்திவைக்கப்பட்டது.

நிவர் புயல் இன்று இரவு கரையை கடக்க உள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 16 மாவட்டங்களுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, ரயில்கள் ரத்து, விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.