குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு, நாளை கன்னியாகுமரி வருகையை முன்னிட்டு சுற்றுலாப்பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு, தற்போது கேரளா, தமிழ்நாடு மற்றும் லட்சத்தீவுகளுக்கு 6 நாள் பயணத்தை மேற்கொண்டுள்ளார். இந்த பயணத்தில் நாளை (மார்ச்-18) அவர் கன்னியாகுமரிக்கு வருகை தருகிறார். குடியரசுத்தலைவர் திருவள்ளுவர் சிலை, விவேகானந்தர் நினைவிடத்திற்கு மரியாதை செலுத்துகிறார்.
அவரது வருகையை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளாக நாளை கன்னியாகுமரியில் சுற்றுலாப்பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. திருவள்ளுவர் சிலை, விவேகானந்தர் மண்டபம், திரிவேணி சங்கமம் போன்ற இடங்களுக்கும் சுற்றுலா பயணிகளுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு, கடந்த பிப்ரவரி மாதம் மதுரை மீனாட்சிஅம்மன் கோவிலுக்கு வருகை புரிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.