பிரதமர் மோடியின் தாயார் மறைவு – குஜராத் செல்கிறார் முதலமைச்சர்!

Default Image

பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் மறைவுக்கு ஆறுதல் கூறுவதற்காக குஜராத் செல்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.

பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் உடல்நல குறைவு காரணமாக இன்று காலை காலமானார். குஜராத்தின் காந்திநகருக்கு சென்ற அவரது தாயார் உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்திய பிரதமர் மோடி, தாயார் உடலை தோளில் சுமந்து சென்றதுடன் இறுதி சடங்கில் பங்கேற்றார்.

இதன்பின் காந்திநகரில் உள்ள மயானத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் உடல் தகனம் செய்யப்பட்டது. தாயார் ஹீராபென் மறைவு முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் மறைவுக்கு ஆறுதல் கூறுவதற்காக குஜராத் மாநிலம் அகமதாபாத் செல்கிறார் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

பிரதமர் மோடி தாயார் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்க 12 மணி விமானத்தில் அகமதாபாத் செல்கிறார் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இதனிடையே, பிரதமர் மோடியின் தாயார் மறைவுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்து இருந்தார். அவரது இரங்கல் செய்தியில், தாயார் ஹீராபென்னுடன் பிரதமர் கொண்டிருந்த உணர்ச்சிபூர்வமான பிணைப்பை நாங்கள் அறிவோம்.

தாயாரின் மறைவால் ஏற்பட்ட துக்கத்தை யாராலும் தாங்கி கொள்வது மிகவும் கடினம். தாயாரின் மறைவு செய்தி கேட்டு மிகவும் வருத்தமடைந்தேன் என்றும் தாயாரை இழந்து வாடும் பிரதமருக்கு முதலமைச்சர் இரங்கல் தெரிவித்திருந்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 05122024
allu arjun
vijaya (21) (1)
T. M. Anbarasan
Pattinampakkam Youngster Died
rohit ravi shastri
gold price dec 5