பிரதமர் மோடி வருகை – முதுமலை புலிகள் காப்பகம் மூடல்!

பிரதமர் மோடி முதுமலை வருகையையொட்டி ஏப்ரல் 6 முதல் 9-ஆம் தேதி வரை புலிகள் காப்பகம் மூடப்படுவதாக அறிவிப்பு.

பிரதமர் மோடி முதுமலை வருகையையொட்டி ஏப்ரல் 6 முதல் 9-ஆம் தேதி வரை புலிகள் காப்பகம் மூடப்படுவதாக அறிவிப்பு.

பாதுகாப்பு காரணங்களுக்காக ஏப்ரல் 6 முதல் 9-ம் தேதி வரை முதுமலை புலிகள் காப்பகம் மூடப்படுவதாக நிர்வாகம் தெரிவித்துள்ளது. முதுமலையில் உள்ள அனைத்து ஓய்வு விடுதிகள், உணவகங்கள் உள்ளிட்டவையும் மூடப்படுகிறது.மேலும், வன விலங்குகளை பார்ப்பதற்கான வாகன சவாரியும் ஏப்ரல் 7 முதல் 9-ஆம் தேதி தற்காலிக நிறுத்தப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

நீலகிரியில் முதுமலை யானைகள் முகாமில், குட்டி யானைகள், பாகன் தம்பதியை மையப்படுத்தி எடுத்த  ‘தி எலிபென்ட் விஸ்பரர்ஸ்’ ஆவணப்படம், சமீபத்தில் ‘ஆஸ்கார்’ விருது பெற்றது. கர்நாடகா வரும் பிரதமர் மோடி, இந்த ஆவணப்படத்தில் இடம்பெற்ற, பாகன் தம்பதியான பொம்மன் – பெல்லியை முதுமலையில் நேரில் சந்தித்து பாராட்ட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதையடுத்து, பிரதமர் வருகையை எதிர்பார்த்து, முதுமலையில் அதிகாரிகள் ஆயத்தப் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில், தற்போது பிரதமர் மோடி முதுமலை வருகையையொட்டி ஏப்ரல் 6 முதல் 9-ஆம் தேதி வரை புலிகள் காப்பகம் மூடப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. முதுமலை தெப்பக்காடு யானைகள் முகாமுக்கு பிரதமர் மோடி வரும் 9ம் தேதி வர உள்ளார். பிரதமர் வருகையை ஒட்டி சுற்றுலா பயணிகள் வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.