தூத்துக்குடியில் இன்று தனியார் வேலைவாய்ப்பு முகாம்..!

Default Image

தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தின் மூலம் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் இன்று காலை 10.30 மணிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடக்கிறது. முகாமில் 10-ம் வகுப்பு,12-ம் வகுப்பு, பட்டப்படிப்பு,டிப்ளமோ,ஐ.டி.ஐ மற்றும் கம்ப்யூட்டர் பயிற்சி முடித்த பதிவுதாரர்கள் கலந்து கொள்ளலாம்.

தனியார் துறையில் பணிபுரிய விருப்பம் உள்ளவர்கள் தங்களது பயோடேட்டா,மற்றும் கல்வி சான்றுகளுடன் முகாமில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். தனியார் துறை நிறுவனங்களில் பணி நியமனம் செய்யப்படும்போது,வேலைவாய்ப்பு அலுவலக பதிவு ரத்து ஆகாது.தனியார் நிறுவனத்தினரும் தங்களுக்கு தேவையான பணியாளர்களை தேர்வு செய்ய முகாமில் கலந்து கொள்ளலாம்.மேலும் வேலைவாய்ப்பு முகாம் குறித்த விவரங்களுக்கு 0461-2340159 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தகவல்களை பெற்றுக்  கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

 

 

 

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

rain update tn
anbumani and ramadoss
lock up death ajith
Saktheeswaran - ajith kumar
ENGvIND - ShubmanGill
PMModi - Ghana India