பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை : இன்று மாசு கட்டுப்பாட்டு வாரியத்துடன் ஆலோசனை

ஜனவரி 1ம் தேதி முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை அமலுக்கு வரவுள்ள நிலையில், மாசு கட்டுப்பாட்டு வாரியதுடன் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெறவுள்ளது. தமிழக முதல்வர்

ஜனவரி 1ம் தேதி முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை அமலுக்கு வரவுள்ள நிலையில், மாசு கட்டுப்பாட்டு வாரியதுடன் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெறவுள்ளது.தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆணையின் படி ஜனவரி 1ம் தேதி முதல் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்கள் மீது விதிக்கப்பட்டுள்ள தடை அமலுக்கு வரவுள்ளது. மேலும் தடை அமலுக்கு வந்த பிறகு தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தினால் அபராதம் விதிக்கப்படும் என கூறியுள்ளனர்.மேலும், இதுகுறித்து ஆலோசிக்க இன்று மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் ஆலோசனை கூட்டம் நடத்தப்படவுள்ளதாக கூறியுள்ளனர்.