இபிஎஸ்க்கு எதிராக போராட்டம்! காவல்துறை அனுமதி பெற்று நடத்தலாம் – ஐகோர்ட் கிளை

அதிமுக மாநாட்டில் கலந்துகொள்ள மதுரை வரும் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக போராட்டம் நடத்த தடை விதிக்க மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் 20-ஆம் தேதி மதுரையில்

Madurai High Court

அதிமுக மாநாட்டில் கலந்துகொள்ள மதுரை வரும் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக போராட்டம் நடத்த தடை விதிக்க மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் 20-ஆம் தேதி மதுரையில் அதிமுக மாநாடு நடக்கும் நிலையில், 19ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்த மதுரை உயர்நீதிமன்றம் கிளை அனுமதி அளித்துள்ளது.

அதிமுக மாநாட்டில் பங்கேற்கும் பழனிசாமிக்கு எதிராக மதுரையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. 20ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி அளிக்க கூடாது என அதிமுக தரப்பில் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வாதம் வைக்கப்பட்டது. 20ம் தேதி அதிமுக மாநாடு நடக்கிறது, 19ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்துவதில் என்ன பிரச்சனை என நீதிபதி கேள்வி எழுப்பி, மனுதாரர் காவல்துறையை அணுகி அனுமதி பெற்று 19ம் தேதி போராட்டம் நடத்தலாம் என ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.

ஆக.20ம் தேதிக்கு பதில் ஆக.19ல் போராட்டம் நடத்த அனுமதி வழங்குவது குறித்து பரிசீலினையில் உள்ளது எனவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அரசு தரப்பு வாதத்தை பதிவு செய்த நீதிபதி, காவல்துறையிடம் உரிய அனுமதி பெற்று போராட்டம் நடத்தலாம் என உத்தரவிடப்பட்டது. காரைக்குடியை சேர்ந்த கணேசதேவர் என்பவர் தாக்கல் செய்த மனு மீது ஐகோர்ட் கிளை ஆணையிட்டது.