#Breaking: 12-ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வு நடைபெறுமா? இன்று மாலை ஆலோசனை!

With the spread of corona, will the public examination for class 12 be held as planned? Education department will consult to postpone or not

தமிழகத்தில் திட்டமிட்டபடி 12-ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வினை நடத்துவதா? அல்லது ஒத்திவைப்பதா என்பது குறித்த பள்ளிக்கல்வித்துறை ஆலோசனை நடத்தவுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்க தொடங்கியது. அந்தவகையில் நான் ஒன்றுக்கு 3,500-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு சில கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. மேலும், தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், தமிழகத்தில் திட்டமிட்டபடி 12-ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வினை நடத்துவதா? அல்லது ஒத்திவைப்பதா என்றும், தேர்தல் முடிந்தாலும் கொரோனா பாதிப்பு அதிகமாக இருக்கும் சூழலில் தேர்வை எப்படி நடத்துவது? என்பது குறித்தும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுடன் பள்ளிக்கல்வித்துறை இன்று மாலை காணொளி காட்சி மூலம் ஆலோசனை நடத்தவுள்ளது.