புதுக்கோட்டை : திடீரென சாலையில் இறங்கிய விமானம்! வாகன ஓட்டிகள் அதிர்ச்சி!

புதுக்கோட்டை - திருச்சி நெடுஞ்சாலையில் விமானம் தரையிறங்கியதை கண்டு வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Pudukkottai flight

புதுக்கோட்டை :மாவட்டம் கீரனூர் அருகே புதுக்கோட்டை-திருச்சி நெடுஞ்சாலையில் இன்று காலை (நவம்பர் 13, 2025) திடீரென சிறிய ரக பயிற்சி விமானம் ஒன்று அவசரமாகத் தரையிறங்கியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. விமானத்தில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த பைலட் மற்றும் இன்னொரு நபர் லேசான காயமடைந்தனர்.

விமானத்தின் முன்பகுதி சேதமடைந்ததால், தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டு இந்த அவசரத் தரையிறக்கம் நடந்ததாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. சாலையில் பயணித்த வாகன ஓட்டிகள் திடீரென விமானம் இறங்குவதைக் கண்டு அதிர்ச்சியடைந்து வாகனங்களை நிறுத்தினர். சம்பவம் நடந்த உடனே காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து விமானத்தை பாதுகாப்பாக விலக்கி, போக்குவரத்தை சீரமைக்கும் வேலைகளில் ஈடுபடவுள்ளனர்.

விமானத்தில் இருந்த இருவரும் உடனடியாக மீட்கப்பட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். விமானப் போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையம் (DGCA) மற்றும் காவல்துறையினர் சம்பவம் குறித்து விரிவான விசாரணை தொடங்கியுள்ளனர். விமானத்தின் தொழில்நுட்பக் கோளாறு, பைலட்டின் முடிவு, சாலைத் தேர்வு உள்ளிட்ட அம்சங்கள் ஆராயப்படுகின்றன. எனவே முழுவதுமாக விசாரணை முடிந்த பிறகு தெரிய வரும்.

புதுக்கோட்டை : திடீரென சாலையில் இறங்கிய விமானம்! வாகன ஓட்டிகள் அதிர்ச்சி!