புதுக்கோட்டை: பாலியல் வழக்கில் இளைஞருக்கு ஆயுள் தண்டனை..!

A youth has been sentenced to life imprisonment for sexually abusing a 17-year-old girl.

17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இளைஞருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே கடந்த 2019-ஆம் ஆண்டு 17 வயது சிறுமியை வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கி விட்டு கருக்கலைப்பிலும் ஈடுபட்டதாக சுரேஷ் என்பவர் மீது மகிளா நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்நிலையில், இந்த வழக்கை விசாரித்த மகிளா நீதிமன்றம் சுரேஷ்க்கு ஆயுள் தண்டனையுடன் ரூபாய் ஓரு லட்சத்து 30 ஆயிரம் அபராதமும் விதித்தது. பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 5 லட்சம் நிவாரணம் வழங்கும் தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.